பிகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. பிகாரின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக உள்ளது. இந்த முடிவுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (இ.பி.சி) மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் பேர் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Bihar caste survey released: EBCs form 36% of population, OBCs at 27.13%
பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக உள்ளது என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் 36 சதவிகிதம் இ.பி.சி-கள் மிகப்பெரிய எண்ணிக்கை சமூகப் பங்கை உருவாக்குகிறார்கள். இதைத் தொடர்ந்து ஓ.பி.சி-கள் 27.13 சதவிகிதம் உள்ளனர் என்று தரவுகள் காட்டுகிறது.
மொத்த மக்கள்தொகையில் யாதவர்கள் 14.27 சதவிகிதம் உள்ளனர் என்று இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது என பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம், பிகார் அரசாங்கம் மாநிலத்தின் அனைத்துப் பிரிவினரின் அனைத்துத் துறை வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் சாதி பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிடுவதற்காக வீடுகளில் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியது.
மக்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் தொடர்பான தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. முழு செயல்முறையும் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மே 4-ம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆகஸ்ட் 7-ம் தேதி பிகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்த மறுத்ததோடு, ஜாதிவாரி கணக்கெடுப்பின் செல்லுபடியை உறுதி செய்யும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறியது. பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 1-ம் தேதி பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாநில அரசு இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி நடைமுறையை முடித்தது. இந்த நடைமுறை பிகார் அரசு தனது தற்செயல் நிதியில் இருந்து சுமார் 500 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“