பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று காலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆர்.ஜே.டி உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் பா.ஜ.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Nitish Kumar Bihar News Live Updates: 'Things were not working out in INDIA bloc.... new alliance will be formed', says Nitish after resigning
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, நிதிஷ்குமாரை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பீகார் புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஐக்கிய ஐனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை நிதிஷ்குமார் சந்தித்தார், அதே நேரத்தில் பா.ஜ.க.,வும் தனது அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. நிதிஷ்குமார் முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பா.ஜ.க ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் RJD அதன் பங்கில் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது, தேஜஸ்வி யாதவ், தனது எம்.எல்.ஏ.க்களிடம், கூட்டணியில் இருந்து விலகுவது நிதிஷ் குமார்தான் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆர்.ஜே.டி.,க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், நிதிஷ்குமாரின் கூட்டணி மாறுதல் இந்தியா கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். கூட்டணியின் தற்போதைய நிலை நல்லதல்ல என்று காங்கிரஸ் ஒப்புக்கொண்டாலும், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை, பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்தத்தை எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று நம்புவதாகக் கூறினார்.
ராஜினாமா செய்த பின் ராஜ்பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், "நான் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கவர்னரிடம் கேட்டுக் கொண்டேன். கட்சித் தலைவர்கள் எனக்கு அறிவுரை கூறினர். அவர்கள் கூறியதைக் கேட்டு ராஜினாமா செய்தேன். சூழ்நிலை நல்லதல்ல. அதனால், நாங்கள் உறவுகளை முறித்துக்கொண்டோம். கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் கூட்டணியில் (இந்தியா) வேலை செய்து கொண்டிருந்தோம், ஆனால் அது செயல்படவில்லை. இப்போது நாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவோம்," என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“