பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ஜே.பி கங்கா சாலையை பாட்னாவில் உள்ள கங்கன் காட் வரை நீட்டிக்கும் பணியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி, 'உங்கள் காலில் விழுந்து கும்பிடுவேன்' என்று நிதிஷ் குமார் கூறினார். “நான் உங்கள் கால்களைத் தொட்டுக் கும்பிடுவேன், தயவுசெய்து பணியை சரியான நேரத்தில் முடியுங்கள்” என்று கெய்காட் (12.1 கிமீ) முதல் கங்கன் காட் (15.5 கிமீ) வரையிலான ஜே.பி கங்கா சாலையின் மூன்றாம் கட்டத் திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘I will touch your feet, please finish work on time’: Bihar CM urges IAS officer to expedite roadwork in Patna
பீகார் மாநிலத்தில் சுமார் 15 நாட்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து. ஜூன் 18 முதல், மாநிலம் முழுவதும் - கிஷன்கஞ்ச், அராரியா, மதுபானி, கிழக்கு சம்பாரண், சிவன் மற்றும் சரண் ஆகிய இடங்களில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன அல்லது குழிக்குள் விழுந்துள்ளன. சிவானில் மட்டும் 9 பாலங்கள்/கல்வெர்ட்டுகளில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தன.
அலட்சியம் காரணமாக நீர்வளம் மற்றும் ஊரகப் பணிகள் துறையைச் சேர்ந்த 15 பொறியாளர்களை பீகார் அரசு ஜூலை 5-ம் தேதி இடைநீக்கம் செய்தது. இரண்டு கட்டுமான நிறுவனங்களை ஏன் கறுப்புப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“