Santosh Singh
பீகார் மாநிலம் பக்ஸரில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்று வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தால் வங்கியால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் பி.டெக் படிப்பிற்கு ஐந்து பசுமாடுகளை கட்டணமாக வசூலிக்கும் வித்தியாசமான கல்விக் கட்டண முறையை கொண்ட கல்லூரி என்று சுற்றுவட்டாரப் பகுதியில் அறியப்பட்ட கல்லூரியாகும்.
பக்ஸரில் உள்ள அரியான் கிராமத்தில் 2010ம் ஆண்டு, வித்யான் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது. பல்வேறு முக்கிய அதிகாரிகள் இந்த கல்லூரியைப் பற்றி மக்கள் மத்தியில் விளம்பரம் செய்தனர். அதில் முன்னாள் டி.ஆ.டி.ஓ ஆராய்ச்சியாளர்கள் எஸ்.கே. சிங், அருண் குமார் வெர்மா, பெங்களூரைச் சேர்ந்த மயூரி ஸ்ரீவஸ்தவா, சமூக செயற்பாட்டாளர் லால் தியோ சிங் மற்றும் சார்ட்டட் அக்கௌண்டண்ட் ப்ரதீப் கார்க் ஆகியோர் அடங்குவார்கள்
இந்த கல்லூரி பாட்னாவில் அமைந்திருக்கும் ஆர்யபட்டா க்யான் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பசுமாடுகளை கட்டணமாக பெற்றுக் கொள்ளும் கல்லூரி என்று சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இந்த கல்லூரி அறியப்பட்டது. முதலாம் ஆண்டுக்கு 2 பசுமாடுகள். அடுத்துள்ள மூன்று ஆண்டுகளுக்கு தலா ஒரு பசுமாடு என்று வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் கல்விக் கட்டணம் செலுத்த இயலாத விவசாய குடும்பத்தினருக்கு மாற்று வழியை காட்டியது இந்த கல்லூரி.
ஆனால் தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி சீல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற தெளிவில்லாமல் இருக்கிறனர் கிராமவாசிகள்.
வி.ஐ.டி.எம். கல்லூரியின் ப்ரோமோட்டர் எஸ்.கே. சிங், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, எங்களில் சிலர் டி.ஆர்.டி.ஓ. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்னுடைய கல்லூரியில் கல்வி நிறுவனம் துவங்கலாம் என்ற ஐடியாவுடன் வந்தனர். பக்ஸர் மற்றும் வாரணாசிக்கு இடையே அமைந்துள்ள ஒரே பொறியியல் கல்லூரி இது மட்டும் தான். பசு மாடுகள் கட்டணமும் சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார்.
கல்லூரியை நடத்தும் வித்யாதான் சொசைட்டியின் தலைவர் எஸ் கே சிங் கருத்துப்படி, பாங்க் ஆஃப் இந்தியாவின் பாட்னா நிறுவனக் கிளை 2010 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 4.65 கோடி ரூபாய் ஆரம்பக் கடனாக கல்லூரிக்கு வழங்கியது. அதன் பிறகு ரூ. 10 கோடிக்கான கடனை வழங்க 2011ம் ஆண்டு ஒப்புக் கொண்டது ஆனால் பணம் கிடைக்கவில்லை. ரூ. 15 கோடிக்கான கொல்லேட்டரல் செக்யூரிட்டியை நாங்கள் வங்கியில் டெபாசிட் செய்தோம் ஆனாலும் எங்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்று கூறிய சிங், குறைவான நிதியின் கீழ் கல்லூரி பாதிக்கப்பட்டது என்று கூறினார்,
எங்களுக்கு ரூ. 10 கோடி கடன் வழங்கப்படவே இல்லை. மேலும் எங்களின் திட்டங்கள் தோல்வி அடையத் துவங்கின. ஆனாலும் ஆரம்பத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 4.65 கோடிக்கான தவணையை நாங்கள் 2012ம் ஆண்உ வரை செலுத்தினோம். 2013ம் ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணத்தை நாங்கள் திருப்பிக் கட்டினோம். குறைவான நிதியில் கல்வி நிறுவனம் செயல்படுகிறது என்பதை உணராமல் வங்கி கடனை மீட்கும் நடவடிக்கையில் கல்லூரியை சீல் வைத்துள்ளது. கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது வங்கி என்றும் சிங் தெரிவித்தார்.
பாட்னாவின் பேங்க் ஆஃப் இந்தியாவின் மண்டல துணை மேலாளர் ராஜேந்திர சிங், நாங்கள் கடனை மீட்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வி.ஐ.டி.எம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
சமீப காலம் வரை பக்ஸரின் சோவன் பகுதியில் உள்ள வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றிய ரவீந்திர ப்ரசாத், “கல்லூரி under-financing-ல் இருந்தது என்று கூறிவிட இயலாது. நாங்கள் அந்த சொசைட்டியின் திட்டங்களை பார்த்த போது நாங்கள் எதிர்பார்த்த சில மதிப்பீடுகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே கூடுதலாக கடன் வழங்கப்படவில்லை. நாங்கள் கடன் தரவில்லை என்றால் வேறு வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறினார்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளனர். 20க்கு மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கட்டணமாக பசுமாடுகளை கொடுத்துள்ளனர். தற்போது 29க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுத காத்துக் கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் படித்த பல மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் படித்த விஜேந்திர மிஸ்ராவின் கதை ஒரு வெற்றிக் கதாஇ. தற்போது பானிபட்டில் உள்ள ஐ.ஒ.சி.எல். ரிஃபைனரி நிறுவனத்தில் லீட் சேஃப்டி ஆஃபிசராக பணியாற்றி வருகிறார். நான் விவசாய பிண்ணனியை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தேன். நான் என்ஜினியர் ஆவேன் என்று நினைத்தும் கூட பார்த்ததில்லை. ஆனால் பசுமாடுகளை கட்டணமாக கல்லூரி ஒன்று வசூலிக்கிறது என்று கூறிய போது எனக்கு நம்பிக்கை வந்தது. எங்கள் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மிகவும் திறமைமிக்க இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற இந்த கல்லூரி துணையாக இருந்தது என்று அவர் கூறினார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.