பீகார் தேர்தல்: சரிவில் இருந்து மீண்ட இடதுசாரிகள்

இடதுசாரி கட்சிகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது.

By: Updated: November 10, 2020, 05:40:18 PM

Bihar election results 2020: Left parties look to gain big, leading in nearly 20 seats :  2015ம் ஆண்டு தேர்தலில் மிகவும் மோசமாக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது இடதுசாரி கட்சிகள். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகள் இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சி.பி.ஐ. (எம்.எல்) 19 தொகுதிகளிலும் சி.பி.ஐ 6 தொகுதிகளிலும் சி.பி.எம். 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இடதுசாரி கட்சிகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது. தற்போதைய நிலவரப்படி அகியாவுன், அர்ராஹ், அர்வால், பல்ராம்பூர், பிபூதிப்பூர், தரௌலி, தரௌந்தா, தும்ரௌன், கோசி, காரகத், மஞ்சி, மதிஹனி, பலிகஞ், தரரி, வரிஸ்நகர், சிராடேய், பச்வாரா மற்றும் பக்ரி தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.

முன்பு பீகாரின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த இடதுசாரி கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் வீழ்ச்சியை சந்தித்தது. 2010 தேர்தலில் சி.பி.ஐ. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற, 2015ம் ஆண்டு சி.பி.ஐ. (எம்.எல்.) மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. 2015ம் ஆண்டு தேர்தலில் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம். ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

To read this article in English

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பரஸ்பர வாக்குகள் பரிமாற்றம் மட்டுமின்றி இரண்டு முக்கியமான பணிகளை இந்த மகா கூட்டணிக்கு செய்தது இடதுசாரி கட்சிகள். இம்மூன்று கட்சிகளும், தொண்டர்கள் அடிப்படையிலான கட்சிகள். இது இந்த கூட்டணியை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்க்க உதவியது. அவர்களின் விசுவாசம் சந்தேகத்திற்கு இடம் இல்லாத ஒன்று. ஏன் என்றால் அவர்கள் கருத்தியல் ரீதியாக பாஜகவிற்கு எதிர்முனையில் தான் இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் இடதுசாரிகளுக்கு ஆதரவு இருக்கும், குறிப்பாக சி.பி.ஐ. (எம்.எல்)க்கு சாதகமாக முடிவுகள் வரும் என்று கூறியது. ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் வழங்கிய பொருளாதார நீதிக்கான செய்தி அவர்களின் தொண்டர்களால் பலமாக வரவேற்கப்பட்டது. இந்தியா டுடே-ஆக்சிஸ் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள் சிபிஐ (எம்.எல்) போட்டியிட்ட 19 இடங்களில் 12-16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தது.

இருப்பினும் மகாகத்பந்தன் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் கடுமையான போட்டிகளை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் என்.டி.ஏவைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் முன்னிலை வகித்து வந்தாலும் தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bihar election results 2020 left parties look to gain big leading in nearly 20 seats

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X