பீகார் தேர்தல்: பிரதமர் மோடிக்காக 8 பொதுக்கூட்டங்கள் 4 லட்சம் ஸ்மார்ட்போன் தொண்டர்கள்

அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு, பிரதமருக்காக குறைந்தது 8 கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கூட்டங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் வரை செல்லக்கூடும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.

By: October 15, 2020, 5:08:08 PM

பிரதமர் நரேந்திர மோடியின் மெய்நிகர் பொதுக்கூட்டங்கள் மிகப் பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், பாஜக 4 லட்சம் கட்சி தொண்டர்களை ஸ்மார்ட்போன்களுடனும் 10,000 சமூக ஊடக போராளிகளையும் தயார் செய்து வருகிறது.

அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு, பாஜக குறைந்தபட்சம் பிரதமருக்கு 8 பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. “பிரதமரின் பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை 1 டஜன் வரை செல்லக்கூடும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார். மேலும், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய அளவில் பொதுக்கூட்டங்களை நடத்த முடியாது என்பதால், மக்கள் பிரதமரின் உரையைக் காண வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

கட்சியால் நியமிக்கப்பட்ட ‘சமூக ஊடக போராளிகள் மற்றும் 4 லட்சம் ‘ஸ்மார்ட்போன் தொண்டர்கள் மோடியின் உரைகளை மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காண்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். சமூக ஊடக தொண்டர்கள் ஸ்மார்ட் போன் தொண்டர்களை காணித்து நிர்வகிக்கிறார்கள்.

இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர் அது குறித்து கருத்துக்களை அவர்களுக்கு தெரிவிக்க பிரதமர் மோடி நேரடியாக வாக்காளர்களை அணுகுவது முக்கியம் என்று அக்கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார். பிரதமர் மோடிதான் இந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு மிகவும் நம்பகமான தலைவர். பீகாரில், மத்திய அரசு திட்டத்தின் பயன்களை நேரடி பரிமாற்றத்தின் கீழ் ஏராளமான பயனாளிகள் பெற்றிருப்பதால் அவர் மத்திய அரசின் திட்டங்களைப் பற்றியும் பேசுவார்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bihar elections bjp 8 rallies 4 lakh smartphone warriors 10000 social media commondos for pm modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X