'கர்பூரி சர்ச்சா' மற்றும் 'அம்பேத்கர் பரிச்சார்ச்சா' நிகழ்ச்சிகள் மூலம், மகாகத்பந்தன் கூட்டணி கட்சிகள் சமூகநீதியை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தில், தேசிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முடக்குவதற்காக பா.ஜ.க-வை குற்றம் சாட்டுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: In Bihar, JD(U), RJD in overdrive to take mileage out of caste survey at grassroots
பீகார் சாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளை வெளியிட்டதன் மூலம் தேசிய அரசியலில் விவாதத்தை உருவாக்கியுள்ள அம்மாநிலத்தில் ஆளும் ஜே.டி.யூ - ஆர்.ஜே.டி கூட்டணி தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களிடம் தனது செய்தியை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பீகார் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்ச்சிகளில், இரு கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பின் பலன்கள் பற்றியும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் ரகசிய உள்நோக்கங்களுடன் அதை எப்படி முடக்கியது என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.
பா.ஜ.க தனது தரப்பில், இந்துக்களை பிளவுபடுத்த இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடியின் போக்கை பின்பற்றுகிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பா.ஜ.க தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு யோசனைக்கு பா.ஜ.க எதிரானது இல்லை என்றாலும், அகில இந்திய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சாத்தியமில்லை என்று கூறினார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, சாதிவாரி கணக்கெடுப்பை ஜே.டி.யூ அதன் மாநிலம் தழுவிய திட்டமான “கர்பூரி சர்ச்சா” (கர்பூரி தாக்கூரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்), ஆர்.ஜேடி. மூலம் அதன் “அம்பேத்கர் பரிச்சார்ச்சா” (அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்) மூலம் இணைத்துள்ளது. பா.ஜ.க ஆட்சியின் கீழ் வகுப்பினருக்கு எதிராகக் கூறப்படும் பாகுபாடுகளை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளது.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு காரணம் அவர்கள்தான் என்று முத்திரை குத்தவும் அதை நிறைவேற்றியதில் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கை முன்னிலைப்படுத்தவும், ஜே.டி.யூ மாநிலம் முழுவதும் “முதல்வருக்கு நன்றி” தெரிவிக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. முதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பாட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை வரும் நாட்களில் மாவட்ட அளவில் கொண்டு செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் கர்பூரி சபாகரில் [ஜே.டி.யூ) பாட்னா அலுவலகத்தின் ஒரு பகுதி] வெள்ளிக்கிழமை கூடினர். கர்பூரி தாக்கூர் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இ.பி.சி) சிறப்புப் பிரிவின் அந்தஸ்து கொடுத்தார் என்றால், அவர்களுக்கு சமூக மற்றும் அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் நிதிஷ்குமார் என்றும், இந்த நிகழ்ச்சியை மாவட்ட அளவில் கொண்டு செல்லவும், மாநிலம் முழுவதும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் மூலம், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்போம்” என்று ஜே.டி.யூ செய்தித் தொடர்பாளர் ரவீந்திர பிரசாத் சிங் கூறினார்.
நாட்டில் ஓ.பி.சி (பிற பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் இ.பி.சி இடஒதுக்கீட்டின் முன்னோடியாகக் கருதப்படும் சோசலிஸ்ட் ஐகானும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூரின் பெயர் சூட்டப்பட்ட, “கர்பூரி சர்ச்சாஸ்” ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ராஜ்யசபா எம்.பி.யான தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் உட்பட கட்சியின் மூத்த தலைவர்களின் கீழ் ஜே.டி.யு ஏழு தனி அணிகளை உருவாக்கியுள்ளது. பீகாரின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல் தொடரை ஜனவரி 24, 2024-க்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது கர்பூரி தாக்கூரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும்.
“இந்த நிகழ்வுகளில் நாங்கள் ஏற்கனவே இ.பி.சி-கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்காக இந்த (நிதிஷ்குமார் தலைமையிலான) அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் பேசி வருகிறோம். இப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் அதனால், மக்களுக்குச் சேரும் பலன்களையும் திட்டத்தில் சேர்த்துள்ளோம். இ.பி.சி-களின் உரிமைகளுக்கு எதிரான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மோடி அரசாங்கம் எவ்வாறு முடக்கியது என்பதையும் நாங்கள் மக்களுக்கு நினைவூட்டுகிறோம்” என்று சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது கட்சி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்கிறது, இது இ.பி.சி-களுக்கான நிதிஷின் பணிகளை பட்டியலிடுவதைத் தவிர, மத்திய அரசு இ.பி.சி-களுக்கு உதவித்தொகை மற்றும் பிற திட்டங்களை நிறுத்தியதன் மூலம் அரசியல் ரீதியாக அவமானப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறது. துணை முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆதரிக்கும் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது முன்வைக்கிறது.
ஆர்.ஜே.டி-யின் “அம்பேத்கர் பரிச்சார்ச்சா” நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் தலித் சமூகத்தை சென்றடைவதற்கான முயற்சியாக காணப்பட்டாலும் - ஒரு காலத்தில் ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பின்னால் நின்று, நிதிஷை சுற்றி வளைக்க மட்டுமே - இது அனைத்து தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் முன்னிலைப்படுத்துகிறது.
“அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் வகுத்த சமூகப் புரட்சியின் அடித்தளம், பௌத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்ட “பகுஜன் ஹிதாயே, பகுஜன் சுகாயே” என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. இதை மோடி அரசு அழித்து வருகிறது. இதைத்தான் நாங்கள் எங்கள் நிகழ்ச்சிகளில் மக்களுக்குச் சொல்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, சாம்ராட் அசோகரின் ஆட்சிதான் சிறந்த இந்தியா” என்று ஆர்.ஜே.டி தேசிய செய்தித் தொடர்பாளர் சுபோத் குமார் மேத்தா கூறினார். இந்த திட்டம் பஞ்சாயத்து அளவில் கொண்டு செல்லப்பட்டு தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மௌரிய வம்சத்தின் பேரரசர் அசோகரின் சமீபத்தில் ஒரு அரசியல் பிரமுகராக மாற்றப்பட்டார், பல்வேறு சமூக மற்றும் அரசியல் குழுக்கள் அவரை ஒரு சூத்திர வகுப்பான கோரி சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வருகின்றனர்.
ஆர்.ஜே.டி கிராமசபைகளை ஏற்பாடு செய்து, அதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி வருகிறது. “இந்தக் கூட்டங்களில் நாங்கள் சமூக நீதியைப் பற்றி பேசுகிறோம்… மிகவும் பின்தங்கிய வகுப்பினரை எப்படி மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவது. நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எப்படி முடக்கி வருகிறது, எப்படி சாதிவாரி கணக்கெடுப்பைக் கொண்டு வந்தோம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என்று பீகார் ஆர்.ஜே.டி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்ஜெய் திவாரி கூறினார்.
பீகாரின் மகாகத்பந்தனின் முக்கிய அங்கமான ஜே.டி.யூ மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய இரண்டும் எதிர்க்கட்சி இந்தியா குழுவின் ஒரு பகுதியாக உள்ளன. இந்தியா கூட்டணி 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை எதிர்கொள்ள தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.