பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டை செப்டம்பர் வரை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின்படி, பீகார், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் இலவச உணவு திட்டத்தின் கீழ் எந்த கோதுமையையும் பெறாது.
தவிர, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களின் கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை.
மே 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசாங்க நிறுவனங்களின் கோதுமை கொள்முதல் ஆண்டுக்கு 42% குறைந்து 16.19 மெட்ரிக் டன்னாக உள்ளதால், இந்திய உணவுக் கழகத்திடம், தானியங்களின் இருப்பு மே 1 அன்று ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு 31 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது.
ஆதாரங்களின்படி, தற்போதைய கோதுமை கையிருப்பு’ தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் செப்டம்பர் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இலவச உணவு திட்டம் (PMGKAY) ஆகியவற்றின் கீழ் உள்ள தேவைகளை அரிதாகவே பூர்த்தி செய்யும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 25-26 மெட்ரிக் டன் கோதுமை தேவைப்படும் நிலையில், மேலும் 10 மெட்ரிக் டன் தானியங்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன.
குறைந்த கையிருப்பு மட்டுமே இருப்பதால், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமைக்கு பதிலாக அரிசியை வழங்குவதற்கான முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஆதாரங்கள் தெரிவித்தன.
மே 1 நிலவரப்படி, இந்திய உணவுக் கழகம் 33.15 மெட்ரிக் டன் அரிசியைக் கொண்டுள்ளது, மேலும் 20 மெட்ரிக் டன்கள் மில்லர்களிடமிருந்து பெறப்படுகிறது.
பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய முக்கிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் ஒரு வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்டிகளில் வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், இந்த சீசனில் 20 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதலை அடைய அரசு நிறுவனங்கள் போராடி வருகின்றன.
மத்திய தொகுப்புக்கு மிகப்பெரிய பங்கு அளிக்கும் பஞ்சாபில் கொள்முதல் - கடந்த ஆண்டு 10.89 மெட்ரிக் டன்னிலிருந்து 8.86 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பிற முக்கிய உற்பத்தி மாநிலங்களில், கோதுமை கொள்முதல் இதுவரை மந்தமாகவே உள்ளது.
திங்களன்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, விவசாயிகளுக்கு ரூ.32,633 கோடி செலுத்தி இதுவரை 16.19 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை, உக்ரைன்-ரஷ்யா மோதலால் உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, இந்தியாவில் இருந்து கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதியில் ஏற்றம் காணப்படுவதால், கோதுமை கொள்முதலில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
2022-23ல் 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கோதுமையை ஏற்றுமதி செய்வதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான கொள்முதல் மற்றும் எஃப்சிஐயிடம் உள்ள பங்குகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு விநியோக தடைகளைத் தவிர்க்க அரசாங்கம் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்த வாய்ப்புள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, இந்தத் திருத்தம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவுக்கு மட்டுமே. இருப்பினும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013-ன் கீழ் ஒதுக்கீடு செய்வது குறித்து மாநிலங்களுடன் விவாதம் நடைபெற்று வருகிறது.
"சில மாநிலங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிக அரிசி எடுக்க விரும்பினால், நாங்கள் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.