Bihar man digs 3km long canal for last 30 years to bring rainwater to his village : நாட்டுக்கான, மக்களுக்கான தன் சமூகத்திற்கான தனிப்பட்ட முறையில் ஆற்றும் பங்கானது மிகவும் முக்கியமான ஒன்ன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மலையில் இருந்து தவறி விழுந்த தன் மனைவி போன்று வேறு யாரும் பாதிக்க கூடாது என்ற அக்கறையில் 22 ஆண்டுகள் மலையை குடைந்து தஷ்ரத் மஞ்சி என்பவர் பாதையை உருவாக்கினார். அதே போன்று தற்போது பீகாரின் கயாவை சேர்ந்த ஒருவர் மலையில் இருந்து நீரை தன் கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு கொண்டு சேர்க்க கால்வாய் ஒன்றை வெட்டியுள்ளார்.
3 கி.மீ நீளமுள்ள இந்த கால்வாயை தனி ஒருவராக, மலையில் இருந்து 30 ஆண்டுகளாக வெட்டி கிராமத்தின் வயல்களை சென்றடையும் வகையில் இறுதி வடிவம் கொண்டு வந்துள்ளார். பிகாரின் கயாவில் உள்ள லஹ்துவா பகுதியில் உள்ள கோத்திலாவா என்ற இடத்திற்கு இவர் இந்த கால்வாயை வெட்டியுள்ளார்.
லாங்கி பூயான் என்ற அந்நபர் இது குறித்து பேசும் போது, “எங்கள் கிராம மக்கள் பலரும் வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்கின்றனர். ஆனால் நாங்கே தான் இருப்பேன். இங்கேயே இருக்க முடிவு செய்ததால் விவசாயத்திற்கு தேவையான நீரை மலையில் இருந்து கொண்டு வர வகை செய்ய வேண்டும் என்று நினைத்து இதை துவங்கினேன். பல ஆண்டுகள் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்று தான் இது. கோதிவாலா கிராமம் மாவோய்ஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் பகுதியில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil