65 வயதான பெண் ஒருவர் 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகளை பெற்றதற்காக, அவருககு மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, பீகார் அரசு ஆவணத்தில் உள்ள தகவல் பெரும்பரரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
பீகார் மாநிலத்தில் பெண் குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் மாநில அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் முஷாபர்பூர் பகுதியில் உள்ள 65 வயதான லீலாதேவி என்ற பெண் , கடந்த 14 மாதங்களில் 8 பெண்குழந்தைகளை பெற்றுள்ளதாகவும், அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு பெண், 9 மாதங்களில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், அவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதான லீலாதேவிக்கு, 20 வயதில் மகன் உள்ளார். அவர்தான் அவருக்கு கடைசியாக பிறந்தவர். அதற்குப்பிறகு அவர் கருவுறவே இல்லை. அதேபோல், சோனியா தேவி மற்றொரு பெண்ணுமே, பேப்பரில் மட்டுமே தாயாகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் பீகார் அரசு இணைந்து ஜனனி சுரக்ஷா யோஜ்னா திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகையை செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அது 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தவறிழைத்தவர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil