Advertisment

பீகார் தேர்தல் டிஷ்யூம்: பஸ்வான் கட்சி வேட்பாளர்களாக மாறும் பாஜக தலைவர்கள்

லோக் ஜனசக்தி கட்சியின் நிலைப்பாடை பாஜக நிராகரித்துள்ளது என்பதனை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாஜகவிடம் உள்ளது.

author-image
WebDesk
New Update
பீகார் தேர்தல் டிஷ்யூம்: பஸ்வான் கட்சி வேட்பாளர்களாக மாறும் பாஜக தலைவர்கள்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பிஜேபி கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மாநிலத்தின்  முன்னணி தலைவர்கள், லோக் ஜனசக்தி கட்சியில் இணைய இருக்கின்றனர்.

Advertisment

பீகார் மாநிலத்தை பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர், நிதிஷ் குமார்தான் என்றும் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் துணை முதலமைச்சரும் பிஜேபி மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ராஜேந்திர சிங், ராமேஸ்வர் சௌராசியா, உஷா வித்யார்த்தி ஆகிய முன்னணி பிஜேபி தலைவர்கள் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மூவரும் முறையே தினாரா, சசாரம், பாலிகஞ்ச் ஆகிய தொகுதிகளில்  எல்ஜேபி வேட்பாளாராக களம் இறக்கப்பட உள்ளனர்.

இந்த மூவரையும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதை தடுக்க பாஜக உயர்மட்டத் தலைவர்கள் தவறிவிட்டனர் என்றும் அறியப்படுகிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும், பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட தேர்தலில் போட்டியிட, குறைந்தபட்சம் ஒரு டஜன் பிஜேபி தலைவர்கள் லோக் ஜனசக்தி கட்சியை அணுகியுள்ளனர். இதில், சில  முன்னணி  ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) கிளர்ச்சியாளர்களும் அடங்கும் என்று  லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜேந்திர சிங் கடந்த புதன்கிழமை  வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  ராமேஸ்வர் சௌராசியா, உஷா வித்யார்த்தி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

பாஜகவின் உயர்மட்ட தலைவரின் அழைப்புகளுக்குப் பிறகு சிங் மற்றும் சவுராசியா எல்ஜேபி வேட்பாளர்களாக போட்டியிட ஒப்புக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் பின்னர் சிராகின் அழைப்புக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் இதுகுறித்து கூறுகையில், “ தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்  நிதிஷ் குமார்தான் என்பதையும்,  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்த வரையில், லோக் ஜனசக்தி கட்சியை நிலைப்பாடை பாஜக நிராகரித்துள்ளது என்பதையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாஜகவிடம் உள்ளது. எங்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவநம்பிக்கை வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். பிஜேபி தொண்டர்கள் எல்.ஜே.பிக்கு ஆதரவாக செயல்பட்டாலோ அல்லது உற்சாகம் இன்றி காணப்பட்டாலோ, பிஜேபி போட்டியிடும் மற்ற தொகுதிகளில் அதற்கான பின்விளைவுகளை அக்கட்சி சந்திக்க நேரிடம்” என்று தெரிவித்தார்.

ஜே.டி.யுவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்க பாஜக முயற்சித்து வருகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்தை கைபற்றவேண்டும் என்பதுதான் பிஜேபி-ன் விருப்பம். இந்த கருத்து தொண்டர்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள்   குழப்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய ஜனதா தளம்122 தொகுதிகளிலும் பிஜேபி 121 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

தேர்தலுக்கு பின்பு பிஜேபி-க்கு ஆதரவு அளிக்கப்படும் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் திரு சிராக் பாஸ்வான் அறிவித்திருப்பதை தாம் நிராகரிப்பதாக  பீகாரின் துணை முதல்வரும், பிஜேபி மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.

Bjp Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment