Santosh Singh
பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இ.பி.சி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) இடஒதுக்கீடு வரம்புகளை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை பீகார் சட்டமன்றம் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
ஆங்கிலத்தில் படிக்க: Bihar reservation bill clears Assembly unanimously, quota raised from 50% to 65%
மேலும் 10 சதவீத EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்) ஒதுக்கீடு தனிச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடைமுறையில் உள்ளதாலும், தற்போதைய மசோதாவின் பகுதியாக இல்லாததாலும், மொத்த ஒதுக்கீட்டு வரம்பு இப்போது 75 சதவீதமாக இருக்கும் என்றும் அரசாங்கம் விளக்கியது. 25 சதவீதம் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும்.
மேல்சபையிலும் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்படும்.
புதிய திட்டத்தின்படி, ஓ.பி.சி.,யினருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும், இ.பி.சி.,யினருக்கு 25 சதவீதமும், பட்டியல் சாதியினருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
முன்னதாக, ஓ.பி.சி.,க்களுக்கு 8 சதவீதமும், இ.பி.சி.,க்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடும் இருந்த நிலையில், பட்டியல் சாதியினருக்கு 14 சதவீதமும், பழங்குடியினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு இருந்தது. பொதுப் பிரிவினர் மற்றும் பெண்களில் உள்ள ஏழைகளுக்கு தலா 3 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தது.
பீகாரில் 2 சதவீதத்திற்கும் குறைவான ST மக்கள்தொகை இருப்பதால், அதன் ஒதுக்கீடு 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால், அவர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுப் பிரிவினரிடையே உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத ஈ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீடு இருப்பதால், நடப்பு மசோதாவில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“