Advertisment

தமிழ்நாடு முதல் மகாராஷ்டிரா வரை... கூட்டணிக் கட்சிகளால் ஓரம் கட்டப்பட்ட காங்கிரஸ்!

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியுள்ளன அல்லது அவ்வாறு செய்ய முயற்சிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Bihar to TN to Maharashtra Congress Pushed around by INDIA allies over seats Tamil News

தமிழகத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில், 2019 இல் வென்ற காங்கிரஸின் மூன்று இடங்களை மாற்றுமாறு தி.மு.க கட்டாயப்படுத்தியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Congress | Dmk | RJD: பீகார் முதல் மகாராஷ்டிரா வரை மற்றும் தமிழ்நாடு முதல் உத்தரபிரதேசம் வரை என எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியுள்ளன அல்லது அவ்வாறு செய்ய முயற்சிக்கின்றனர்.

Advertisment

இதில் வருத்தம் இருந்தாலும், காங்கிரஸுக்கு குறைவான விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஏனெனில் இந்த மாநிலங்களில் சிலவற்றில் காங்கிரஸானது சிறிய கட்சியாகவும், மாநிலக் கட்சிகளையே பெரிதும் சார்ந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்:  Pushed around by INDIA allies, Congress does a tightrope over seats: Bihar to TN to Maharashtra

தமிழகத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில், 2019 இல் வென்ற காங்கிரஸின் மூன்று இடங்களை மாற்றுமாறு தி.மு.க கட்டாயப்படுத்தியது. காங்கிரஸின் 2019 இடங்கள் மற்றும் வேட்பாளர்களில் 4-5 இடங்களை மாற்ற தி.மு.க முதலில் விரும்பியுள்ளன. ஆனால், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2019 இல் ஆரணி மற்றும் திருச்சிராப்பள்ளியில் வெற்றி பெற்ற தேனி, ஆரணி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றாக திருநெல்வேலி, கடலூர் மற்றும் மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

ஆரணியை தி.மு.க கைப்பற்றியதால், காங்கிரஸ் எம்.பி-யான எம்.கே.விஷ்ணு பிரசாத்தை கடலூருக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இடமாற்றம் காரணமாக அக்கட்சியால் அதன் முன்னாள் பி.சி.சி தலைவர் சு.திருநாவுக்கரசரை திருச்சியில் நிறுத்த முடியவில்லை. அங்கு இப்போது ம.தி.மு.க சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். தவிர, கரூர் தொகுதியை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது அதன் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யும் ராகுல் அணி உறுப்பினருமான ஜோதிமணியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் கட்சி ஒப்புக்கொள்ளவில்லை.

பீகாரில் இது வேறுபட்டதல்ல, அங்குள்ள மகா கூட்டணி (மகாகத்பந்தன்) மாநிலத்தின் 40 இடங்களுக்கான தொகுதி பங்கீடு ஃபார்முலாவை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. இங்கும் காங்கிரசுக்கு கேட்ட சில இடங்கள் கிடைக்கவில்லை. பூர்ணியா தொகுதியை ஆர்.ஜே.டி கட்சிக்கு மறுத்தது மிகப்பெரிய பின்னடைவாகும். 2019 இல் ஆர்.ஜே.டி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், முன்னாள் எ.ம்பி ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், சமீபத்தில் தனது ஜன் அதிகார் கட்சியை ஆரவாரத்திற்கு மத்தியில் காங்கிரஸுடன் இணைத்த இடத்தை மீண்டும் சீட் கோரியது.

பூர்ணியா ஒருபுறம் இருக்க, ஆர்.ஜே.டி சுபாலைக் கூட ஒப்புக்கொள்ளவில்லை. இது பப்பு யாதவ் தனது விருப்பப்பட்டியலில் பூர்ணியாவிற்கு மாற்றாக வைத்திருந்த சீட்களில் ஒன்றாக இருந்தது. யாதவின் மனைவியும் ஏ.ஐ.சி.சி செயலாளருமான ரஞ்சீத் ரஞ்சன் கடந்த காலத்தில் 2004 மற்றும் 2014 என இரண்டு முறை சுபால் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டிலும் போட்டியிட்டார்.

2019 ஆம் ஆண்டு சி.பி.ஐ வேட்பாளராக கன்ஹையா குமார் களத்தில் இருந்த பெகுசராய் இருந்தது. 2021 இல் கட்சியில் இணைந்த குமாருக்கு சீட் கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்பியது, ஆனால் ஆர்.ஜே.டி அதை மீண்டும் சி.பி.ஐ-க்கு வழங்கியது. முன்னாள் ஆளுநரும் மூத்த தலைவருமான நிகில் குமாரை நிறுத்த விரும்பிய அவுரங்காபாத் தொகுதியை காங்கிரஸுக்கு ஆர்.ஜே.டி மறுத்தது. 2019 இல், ஆர்.ஜே.டி ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு சீட் கொடுத்தது, அகட்சி இப்போது பா.ஜ.க-வுடன் உள்ளது.

காங்கிரஸுக்குக் கிடைத்த ஒரேயொரு கருணை என்னவென்றால், பல கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆர்.ஜே.டி 9 இடங்களை வழங்க ஒப்புக்கொண்டதுதான். கட்சி நிச்சயமாக வருத்தத்தில் உள்ளது, ஆனால் ஆர்.ஜே.டி-யை காங்கிரசால் ஒரு கட்டத்திற்கு மேல் தள்ள விரும்பவில்லை.

மகாராஷ்டிராவில், காங்கிரஸ் இன்னும் சிவசேனா (யு.பி.டி) மற்றும் என்.சி.பி (சரத்சந்திர பவார்) ஆகியவற்றுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. சாங்கிலி, பிவாண்டி, மும்பை சவுத் சென்ட்ரல் மற்றும் மும்பை வடமேற்கு ஆகிய நான்கு இடங்களை கேட்கும் காங்கிரஸ், அதில் எந்த இடத்தையும் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

உண்மையில், சிவசேனா (யு.பி.டி) அணி ஏற்கனவே சாங்லி மற்றும் மும்பை சவுத் சென்ட்ரலுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்து, காங்கிரஸை வருத்தப்படுத்தியது. தமிழ்நாடு மற்றும் பீகாரில் போலல்லாமல், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் விளிம்பு நிலையில் உள்ளது. ஆனால் இந்திய கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்க மாநில கட்சிகளை எரிச்சலூட்டுவதில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமை எச்சரிக்கையாக உள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி ஒரு உறுதியான கோட்டை வரைய வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

“மாநிலங்களில் கட்சியின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் மத்திய தலைமை உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், மத்தியத் தலைமை ஒளியியல் குறித்து எச்சரிக்கையாக இருப்பதால், பிராந்தியக் கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் கடுமையாகத் தள்ளினால், தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் பெரிய மனதைக் காட்டவில்லை என்று இந்தக் கட்சிகள் சொல்லும். எல்லா சமரசங்களையும் செய்து கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. நாங்கள் தமிழ்நாடு மற்றும் பீகாரில் விளிம்பு நிலை வீரர்களாக இருக்கலாம், ஆனால் மகாராஷ்டிராவில் அப்படி இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.

உ.பி.யிலும், சமாஜ்வாதி கட்சியால் காங்கிரஸ் ஓரம் கட்டபட்டது. முதலில் ஒருதலைப்பட்சமாக தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாகவும், மாநிலத்தில் 11 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அறிவித்தது. சமாஜ்வாதி கட்சி முன்னோக்கி சென்று காங்கிரஸ் விரும்பும் பல இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. ஆர்.எல்.டி இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, அக்கட்சி 17 இடங்களாக உயர்த்தியது. ஆனால் காங்கிரஸுக்கு  ஃபரூகாபாத், பதோஹி, லக்கிம்பூர் கெரி, ஷ்ரவஸ்தி மற்றும் ஜலான் உட்பட இன்னும் சில இடங்கள் கிடைக்கவில்லை. இந்த இடங்களில் அக்கட்சி 2009 இல் வென்றது குறிப்பிடதக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment