பீகாரில் பயங்கரம்: சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்வதை வீடியோவாக வெளியிட்ட கொடூரர்கள்!

வீடியோ வெளியாகி சில மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

பீகார் மாநிலத்தில் பட்டப்பகலில் சிறுமி ஒருவரிடம் மர்ம நபர்கள் சிலர்  பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ  சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. அதில், சிறுமியை சிறார்கள் சிலர் பட்டப்பகில் ரோட்டில் வைத்து அத்துமீறுகின்றனர்.  உதவி, உதவி என அந்த சிறுமி கத்த ஒருவர் கூட  அங்கு அவளுக்கு  உதவிக்கு வரவில்லை. அத்துடன், சிறார்கள் அந்த பெண்ணிடம் அத்து மீறுவதை  கூட்டத்தில் இருக்கும் சிலர்  செல்ஃபோனில் படம் பிடிக்கின்றனர்.

இந்த  வீடியோ வெளியாகி சில மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்பு, நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி தாக்குத்தலுக்கு ஆளான இடம், பீகார் மாநிலம் ஜகானாபாத் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதன் பின்பு, தீவிர விசாரணையில் இறங்கி பீகார் மாநில காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுக்குறித்து பேசிய, ஜகானாபாத் எஸ்.பி. மணிஷ் , “சிறப்பு விசாரணை குழு 4 பேரை கைது செய்து உள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிறரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்யவும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

போலீஸ் தரப்பு தகவலின்படி 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கத்துவா, உன்னாவ் போன்ற வழக்குகள் நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், தற்போது பீகாரிலும் இதுப் போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close