உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியா சௌகான். தொழில்முறை பைக் ஓட்டுநரான இவர், யமுனா விரைவுச் சாலையில் டெல்லிக்கு பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார்.
இவர் இயக்கிய பைக் கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் (Kawasaki Ninja ZX-10R) ரக வாகனம் ஆகும்.
இந்த வாகனத்தில் அகஸ்தியா கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலே தலை நசுங்கி, பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.
தொழில்முறை பைக்கரான அகஸ்தியா இதுபோன்று அதிகவேகமாக செல்லும் வகையிலான பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
விபத்துக்கு முன்னதாக 300 கிலோ மீட்டர் வேகத்தை எப்படியாவது எட்டி விட வேண்டும் என்ற முனைப்பில் அகஸ்தியா பைக்கை வேகமாக இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பைக் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்திருக்கலாம் என தெரியவருகிறது.
யூடியூபர் அகஸ்தியா சௌகானின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் பைக்கை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், வெளிநாட்டில் உள்ள சாலைகளில் கூட 300 கிலோ மீட்டர் வேகம் என்பது ஆபத்தானதுதான், சாத்தியமில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“