Advertisment

பில்கிஸ் பானோ வழக்கு தீர்ப்பு: 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி என்ன சொல்கிறார்?

நீதிபதி சால்வி, பில்கிஸின் வாக்குமூலம் "தைரியமாக" இருந்ததைக் கவனித்து, அந்த நபர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

author-image
WebDesk
New Update
bilkis bano convict remission

பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை நீக்கத்திற்கு எதிராக, டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டம். (Express/Amit Mehra)

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதற்காக 2008 இல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி (ஓய்வு) யு டி சால்வி, வியாழன் அன்று “பாதிக்கப்படுகிறவருக்கு தான் அது நன்றாகத் தெரியும்” என்றார்.

Advertisment

தண்டனையை நீக்குவதற்கான விண்ணப்பத்தை குஜராத் அரசு குழு ஏற்றுக்கொண்டதையடுத்து, 11 குற்றவாளிகள் திங்கள்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விசாரணைக்கு தலைமை தாங்கிய, மும்பை நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்போதைய சிறப்பு நீதிபதியாக இருந்த நீதிபதி சால்வி, பில்கிஸின் வாக்குமூலம் "தைரியமாக" இருந்ததைக் கவனித்து, அந்த நபர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

publive-image
பில்கிஸ் பானோ மற்றும் அவரது குடும்பத்தினர் சிங்வாட்டில் உள்ள முன்னாள் குடியிருப்பு, தற்போது ஆடைக் கடை உரிமையாளருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. (Express/Nirmal Harindran)

“விடுதலை வழங்குவது குறித்த அம்சத்தில் வழிகாட்டுதல்கள் உள்ளன என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன், மாநிலமே இந்த வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அவர் தெரிவித்தார்.

நியாயம் மற்றும் பில்கிஸுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து, இந்த வழக்கு 2004 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்ட பின்னர், மும்பை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

"நீண்ட காலத்திற்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போது அது அரசின் கையில் உள்ளது. மாநில அரசு முடிவெடுக்க வேண்டும். அது சரியா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ பார்க்க வேண்டும்” என்று நீதிபதி சால்வி கூறினார்.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, பில்கிஸ் தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இன்று நான் இதை மட்டும்தான் சொல்ல முடியும் – எந்த ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி முடிவடையும்? எங்கள் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களை நான் நம்பினேன். நான் அமைப்பை நம்பினேன், நான் மெதுவாக என் காயங்களுடன் வாழ கற்றுக்கொண்டேன். இந்த குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து எனது அமைதியை பறித்துள்ளது மற்றும் நீதியின் மீதான எனது நம்பிக்கையை அசைத்துள்ளது” என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சால்வி பில்கிஸ் அறிக்கையைப் பார்க்கவில்லை, ஆனால் வழக்கின் தீர்ப்பை அனைவரும் படிக்க வேண்டும் என்றார்.

தீர்ப்பு' வழக்கின் சூழ்நிலைகள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், எந்த வகையில் குற்றம் நடந்தது என பல விஷயங்களை விளக்கும்; பில்கிஸ் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை கூறியிருந்தார். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, ”என்று அவர் கூறினார்.

தீர்ப்பு, நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை இதில் காணலாம். இப்போது உண்மை சூழ்நிலையுடன், முழுமையான பார்வையை எடுத்து பின்னர் ஒரு முடிவை எடுக்க வேண்டிய அரசின் முன் இவை இருக்கும் என்கிறார் இந்த ஓய்வுபெற்ற நீதிபதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment