பில்கிஷ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கின் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
குஜராத்தில் கோத்ரா கலவரத்தில் (2002, மார்ச் 03) தாசூத் மாவட்டத்தில் உள்ள லிம்கேதா மாவட்டத்தில் பில்கிஷ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், 3 பேர் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 11 பேரும் 14 ஆண்டுகள் தண்டனை காலத்தை சிறையில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஏனெனில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு, விடுதலை உள்ளிட்ட கருணை அளிக்கக் கூடாது என்று சட்டம் கூறுகிறது.
இப்படியிருக்க பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது.
இந்த நிலையில், “நன்னடத்தை காரணமாக இந்த 11 பேரின் விடுதலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது என்றும் தண்டனை காலமான 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“