Advertisment

இலவச கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் கூடுதல் உணவு தானியங்களுக்காக ரூ.1.15 லட்சம் கோடி ஒதுக்கீடு

Bill for free vaccines and extra foodgrains will be Rs 1.15 lakh crore மாநில ஒதுக்கீட்டில் 25 சதவீதம் உட்படத் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து 75 சதவீத அளவை மையம் வாங்குவதாகவும், அதை இலவசமாக மாநில அரசாங்கத்திற்கு வழங்குவதாகவும் கூறினார்.

author-image
WebDesk
New Update
Bill for free vaccines and extra foodgrains will be Rs 1-15 lakh crore in fy21 Tamil News

Bill for free vaccines and extra foodgrains will be Rs 1-15 lakh crore in fy21 Tamil News

Bill for free vaccines and extra foodgrains will be Rs 1.15 lakh crore in fy21 Tamil News : ஜூன் 21 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்குவதற்கான பிரதமரின் முடிவான ரூ.35,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, ​​கூடுதலாக ரூ.15,000 கோடி தேவைப்படும்.

Advertisment

"பல சப்ளையர்கள் மற்றும் வெவ்வேறு விலைகளுடன் சரியான மதிப்பீட்டை வழங்குவதற்கு நேரம் தேவைப்படும். ஆனால் தோராயமான மதிப்பீடு, இந்த ஆண்டு தடுப்பூசிகளுக்கான மொத்த செலவு ரூ.45,000-50,000 கோடியாக இருக்கலாம். பட்ஜெட்டில், நாங்கள் ரூ.35,000 கோடி வழங்கியுள்ளோம். இதில், சுமார் 5,000 கோடி ரூபாயை அரசாங்கம் செலுத்தியுள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்வதால், மாநிலங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களில் இதற்குக் கூடுதல் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். “பெரும்பாலான டெண்டர்கள் வெற்றிபெறவில்லை. எனவே, தடுப்பூசிகளை வாங்குவதற்கு இதுவரை மாநிலங்களின் செலவு மிகக் குறைவு. இனிமேல், அது இருக்காது” என்று அவர் கூறினார்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ் இலவச உணவு தானிய விநியோகத்தை இந்த ஆண்டு நவம்பர் வரை நீட்டிப்பதற்கான மற்றொரு முடிவு, 2021-22-ம் ஆண்டில் ரூ.1.1-1.3 லட்சம் கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தில், இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், அவை மே மற்றும் ஜூன் மாதங்களில் செயல்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது.

PMGKAY-ன் கீழ், 5 கிலோ உணவு தானியங்கள் - அரிசி / கோதுமை / கோர்ஸ் தானியங்கள் ஆகியவை தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ன் கீழ் வரும் அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் முதலில் கடந்த ஆண்டு, முதல் கோவிட் -19 அலையின்போது தொடங்கப்பட்டது.

ஆனால், 2020-21-ம் ஆண்டுக்கான இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்திற்கு (Food Corporation of India (FCI)) நிலுவைத் தொகையை விட அதிகமாக செலுத்தப்படுவது இந்த ஆண்டு உணவு மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்க உதவும். இந்த திட்டத்தை நவம்பர் வரை நீட்டிப்பதனால், நிதி பாதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக மென்மையாக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். "1.3 லட்சம் கோடி ரூபாயின் முழு தாக்கமும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் உணரப்படாது. ஏனெனில், நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது. எனவே உண்மையான தாக்கம் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக இருக்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

எனவே, இதன் விளைவாக, தடுப்பூசிகள் மற்றும் உணவு தானியங்கள் வழங்கல் ஆகியவற்றின் கூடுதல் செலவு 2021-22-ம் ஆண்டில் சுமார் 1.15 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில், திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு மேல் ரூ.1.2 லட்சம் கோடி உணவு மானியங்களை அரசாங்கம் செலுத்தியது. இதில், எஃப்.சி.ஐ-க்கு நிலுவைத் தொகை செலுத்துதல் மற்றும் கடந்த ஆண்டு 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகித்தல் ஆகியவை அடங்கும்.

கடந்த திங்களன்று உரையாற்றிய பிரதமர், முந்தைய கோவிட் -19 தடுப்பூசி கொள்கையை மாற்றியமைத்து, மாநில ஒதுக்கீட்டில் 25 சதவீதம் உட்படத் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து 75 சதவீத அளவை மையம் வாங்குவதாகவும், அதை இலவசமாக மாநில அரசாங்கத்திற்கு வழங்குவதாகவும் கூறினார். இதனால், எந்தவொரு மாநில அரசும் தடுப்பூசி கொள்முதல் செய்ய செலவிட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் இது குறித்து கேள்விகளை எழுப்பியதோடு பல மாநிலங்கள் தடுப்பூசிகளை மையமாக வாங்க முயற்சி செய்ததால் இந்த தடுப்பூசி கொள்கை மாற்றம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள், லாக் டவுன் நெறிமுறைகளில் கட்டுப்பாடுகளைக் கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ள நேரத்தில் இது வருகிறது.

மே 1 அன்று, மத்திய அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்தியது. சந்தையைத் திறந்தது. வேறுபட்ட விலை நிர்ணயம் மற்றும் விநியோகங்களில் பொது-தனியார் பிளவு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையின் கீழ், 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகளை வாங்குவது மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற பொறுப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Covid Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment