Anant Goenka
Bill Gates Interview Covid19 Pandemic Vaccine : மெலிண்டா கேட்ஸுடன் இணைந்து பில்கேட்ஸ், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகின் மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமான இந்நிறுவனம், பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்கள் குறித்து தங்களின் ஆண்டு அறிக்கையை வெளியிட்ட பிறகு, ஆனந்த் கோயங்காவுடன் உரையாடினார் பில் கேட்ஸ். அந்த உரையாடலில் இடம் பெற்ற சில முக்கியமான கேள்விகளும் பதில்களும்
ஆனந்த் கோயங்கா : நீங்கள் பரிந்துரைத்த புத்தக பரிந்துரையில் இருந்து துவங்குகிறேன். ஃபேக்ட்புல்னெஸ் (Factfulness). அந்த புத்தகத்தின் மையக்கருகுறைவான வன்முறைகள், அதிக சமத்துவம், குறைவான ஏழைகள் என்று உலகம் முன் எப்போதைக் காட்டிலும் இப்போது எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதை கூறுகிறது. எந்த அளவிற்கு கொரோனா பெருந்தொற்று இந்த மையக்கருத்தை எப்படி தடம் புரட்டியுள்ளது?
பில்கேட்ஸ் : இது மிகப்பெரிய பின்னடைவு தான். அதனை அளவிடுவது மிகவும் கடினம். ஏன் என்றால் பொருளாதார புள்ளி விபரங்கள் தெளிவாக இருந்தாலும் கூட நிறைய மனநில பிரச்சனைகள் உள்ளன. நிறைய நபர்கள் கல்வி வாய்ப்பினை இழந்துள்ளனர். தொற்றுக்கு முந்தைய நிலையை அடைய 2 முதல் 5 வருடங்கள் ஆகும். இந்த நிலை நிரந்தரம் அல்ல. ஒப்பீட்டளவில் இது உலக போரைப் போன்றது. ஏன் என்றால் பெரிய அளவில் உயிர் சேதாரங்களைக் கூட காணாத நாடுகளில் பொருளாதார அழிவுகள் ஏற்பட்டுள்ளது.
இது அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் மற்றொரு தொற்றினை சந்திப்போம் என்ற கருத்தினை முன் வைக்கின்றதா?
ஒரு தொற்றுநோய்க்கான வாய்ப்பு அல்லது இயற்கையாய் உருவாகும் ஒரு தொற்று நோய்க்கான வாய்ப்பு என்பது ஒரு வருடத்திற்கு 2% என்ற அளவில் தான் இருக்கிறது. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெருந்தொற்று ஏதும் ஏற்படாமல் நாம் முன்னோக்கி செல்ல ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. இப்போது நாம் இதை மட்டும் கருதக் கூடாது. நம்முடைய அரசு நோய் கண்டறியும் திறன், சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குகின்றவா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். எனவே அவர்கள் விரைவாக பதில் அளிக்க முடியும். அப்படி நடந்தால் தொற்றுநோய் ஒரு மிகச்சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிடும். ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகள் விரைவில் இந்த பாதிப்பில் இருந்து முன்னோக்கி நடந்துவிட்டனர். உண்மையில் அவர்கள் நாடுகளில் ஏற்பட்ட சேதாரம் மிகவும் குறைவு தான்.
தொற்றுநோய் காலத்தின் போது, நம்மிடம் அனைத்து தேவையான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற அளவில் வசதிகள் இல்லை என்று நினைக்கின்றீர்களா?
2015ம் ஆண்டில் என்னுடைய டெட் உரை மற்றும் மற்ற நிபுணர்கள் மூலம் செய்யப்பட்ட எச்சரிக்கைகள் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டன. சி.இ.பி.ஐ. (Coalition for Epidemic Preparedness Innovations) என்று அழைக்கப்படும் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இந்த தொற்றுநோய் காலத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியது. ஆனால் அது, இன்று செய்ய தேவையான நடவடிக்கைகளில் 5% கூட இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
பொதுவாக போலியோ மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு வேலை செய்ய பணியாட்களுக்கு நிதி வழங்கப்பட்டது. அது நிறைய உதவியது. ஆனால் நம்மிடம் கோடிக் கணக்கில் அப்படியான பணியாட்கள் இல்லை. நம்மிடம் 3000 முதல் 4000 நபர்களே இருந்தனர்.
சிறந்த நோய் கண்டறியும் கருவிகள், கண்காணிப்புகள், ஆர் அண்ட் டி, போன்றவற்றை துவங்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மற்றொரு பெருந்தொற்றுக்கு தயாராகியிருக்க மாட்டோம். நம்மிடம் இதற்கான முறையான உள்கட்டமைப்பு இல்லாத போது நாம் மீண்டும் இது போன்று பாதிக்கப்பட மாட்டோம் என்றும் நீங்கள் கூறுவது சரி என்று நாம் நம்புவோம்.
இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நம் வாழும் வாழ்வுடன் இணைக்கப்பட்ட தொற்றுநோயிலிருந்து நாம் கற்றுக் கொண்ட மற்ற பாடம் ஏதாவது இருக்கிறதா? இது இயற்கையோடு எவ்வாறு முரண்படுகிறது? பெருந்தொற்று நமக்கு ஒரு எச்சரிக்கை அழைப்பு என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? நாம் வாழும் முறைக்கும் இந்த தொற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவாக நிறுவப்படவில்லை என்று நினைக்கின்றீர்களா?
உங்களுக்கு நெருக்கடியான சூழல் இருக்கும் போது மற்ற பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்துவது குரையும். ஆனால் இந்த பெருந்தொற்றில் அது அப்படி இல்ல. மோசமான காலநிலை பிரச்சனை நிகழ்வுகள் இருப்பதால் இளைஞர்கள் அதிக அளவு அதைப்பற்றி பேசுகின்றன. சில அரசுகள், எடுத்துக் காட்டாக ஐரோப்பிய ஒன்றியம் ரிக்கவரி பணத்தை எடுத்து காலநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு நியமிக்கின்றன.
இது நல்ல விசயம். ஏன் என்றால் காலநிலை குறித்து, நம்மிடம் நிறைய ஆற்றல் சக்தி உள்ளன. ஆனால் நம்மிடம் முறையான திட்டங்கள் ஏதும் இல்லை. ஏன் என்றால் அதிக அளவில் உமிழ்வு ஆதாரங்கள் உள்ளன. சிமெண்ட், எஃகு போன்றவை. இது வெறும் கார் அல்லது மின்சார தேவைக்கான எமிஷன் மட்டும் கிடையாது. உங்களின் அரசாங்கம் உங்கள் சார்பாக சிந்தித்து பெரிய பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அதற்கான நிபுணர்கள் தேவை என்பதை பெருந்தொற்று உணர்த்தியுள்ளது.
எனவே தொற்றுநோய்களில் நாம் கண்டது என்னவென்றால், பயோன்டெக் உடன் ஃபைசர் வேலை செய்கிறது. சீரம் உடன் அஸ்ட்ராஜெனெகா இணைந்து வேலை செய்கிறது; இந்த வகையான இணைப்புகள் சிக்கலைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை – அவை சாதாரண சந்தை, லாபத்தைத் தேடுவது அல்ல, மாறாக கொரோனா வைரஸிற்கு எதிராக மனிதகுலம் ஒன்று சேருவது. இது மிகவும் உற்சாகமானது என்று நான் நினைக்கிறேன்.
உலகில் அதிக அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள். அதனால்தான் எங்கள் அடித்தளம் அந்த உற்பத்தியாளர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது, மேலும் உயர்தர ஒப்புதல்களைப் பெற்ற தடுப்பூசிகளுக்கான கட்டணங்களை நாம் ஏற்பாடு செய்தோம்.
இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சீரம் நிறுவனத்துடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பினை நான் அறிவேன். இந்தியாவில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் கருத்து இருக்கிறதா உங்களிடம்?
உலக அளாவில் கிட்டத்தட்ட 150 இடங்களில் தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. உங்களுக்கு தெரியும் அதில் நிறைய வேலை செய்யாது. அல்லது சரியான காலத்திற்கு வராது. தரநிலை கட்டுப்பாட்டிற்கு சென்ற தடுப்பூசிகள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஏன் என்றால் மக்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து கவலைப்படுவார்கள். மேலும் குறைந்த விலையில் அதிகமாகவும் தயாரிக்க இயலும்.
ஃபைசர் மற்றும் மாடர்னாவின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் விலை உயர்ந்தவை. அவற்றை அளவிடுவது கடினமாக உள்ளது. ஆனால் அவை தீர்வுகளில் ஒரு பகுதியாகும். ஆனால் இது போன்ற தடுப்பூசிகளை வளரும் நாடுகள் பெறாது.
ஃபைசர் நிறுவனம் 40 மில்லியன் ஷாட்களுக்கு உறுதி கொடுத்துள்ளது. ஆனால் நமக்கு தேவையானது மேலும் 2 பில்லியன். அந்த இலக்கை விரைவாக அடைய அவர்கள் ஆஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அவை அனைத்தும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு செல்லும்.
இது போன்ற தரவுகளை பெற முடியுமா அல்லது அந்த அளவிற்கு தயாரிக்க இயலுமா என்பது தெளிவாக இல்லை. ஒரு வேலை அப்படி இருந்தால் அது நன்றாக இருக்கும். இந்த ஐந்து நிறுவனங்களும் தான் உலகத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் முதன்மை நிறுவனங்களாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil