கடந்த ஆண்டு சபரிமலை கோயிலில் முதன்முதலில் தரிசனம் செய்த இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி மீது கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே, மிளகாய்ப்பொடி ஸ்பிரே தெளித்ததற்காக இந்து ஹெல்ப்லைன் ஆர்வலர் ஸ்ரீநாத் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, க்டந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோயிலில் முதன் முதலில் தரிசனம் செய்த இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி மீது இந்து ஹெல்ப்லைன் ஆர்வலர் ஸ்ரீநாத் பத்மநாபன் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியே மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார். இதையடுத்து பிந்து அம்மினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர், புனேவைச் சேர்ந்த ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் பிற ஆர்வலர்களுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சபரிமலை வரை மலையேற முயற்சிக்கும் முன்பு போலீஸ் பாதுகாப்பு பெற முயன்றார்.
Shocking visuals of pepper/ chilli spray being sprayed at Bindu Ammini outisde the commissioner office by one of the protesters . She has been moved to the hospital. Six other women including Trupti Desai inside the police commissioner's office. #Sabarimala #Kerala @ndtv pic.twitter.com/d24chgs8b3
— Sneha Koshy (@SnehaMKoshy) November 26, 2019
கடந்த ஆண்டு நவம்பரில் எதிர்ப்பாளர்கள் அவரது நுழைவுக்குத் தடை விதித்ததை அடுத்து, சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் தேசாயின் இரண்டாவது முயற்சி இதுவாகும். “சன்னதியில் தரிசனம் செய்த பின்னரே நான் கேரளாவை விட்டு வெளியேறுவேன்” என்று அவர் கூறினார். அரசியலமைப்பு தினமாக இருந்ததால் இன்று (நவம்பர் 26) சன்னதியை பார்வையிட அவர் தேர்வு செய்ததாகவும். சாமி அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பை கொண்டு வந்துள்ளதாகவும் தேசாய் கூறினார்.
கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு வருகை தரும் பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் எடுத்த முடிவுக்கு பின்னால் சதி உள்ளதாக குற்றம் சாட்டினார். கேரளாவில் திருப்தி தேசாய் மற்றும் பிறரின் வருகைக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று இயல்பாகவெ அரசாங்கத்திற்கு சந்தேகம் உள்ளது. அவர் மகாராஷ்டிராவின் புனேவிலிருந்து வருகிறார். அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிறைய செல்வாக்கு செலுத்துகின்றன. அவர்களின் வருகையை ஒரு ஊடக நிறுவனம் மட்டுமே அறிந்திருந்தது. அவர்கள் கோட்டயம் வழியாக சபரிமலைக்குச் செல்வதாகக் கூறினர். ஆனால் அவை எர்ணாகுளத்தில் உள்ள போலீஸ் கமிஷனரின் அலுவலகத்தில் முடிவடைகிறது. அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் மிளகாய்ப் பொடி ஸ்பிரேவுடன் பெண்ணைத் தாக்கினார். இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு உறுதியான திரைக்கதை, நிகழ்ச்சி நிரல் இருப்பதாக நம்புவதில் தவறில்லை. ஒரு நபர் தாக்குவதற்காக மிளகாய் பொடி ஸ்பிரேவுடன் அங்கே தயாராக நிற்கிறார். அமைதியான சபரிமலை யாத்திரை காலத்தில் வன்முறையை பரப்ப ஒரு அமைப்பாக்கப்பட்ட முயற்சி உள்ளது என்பது தெளிவாகிறது.” என்று கூறினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீற விரும்பும் நபர்கள் உள்ளனர் என்பதை இந்த தாக்குதல் காட்டுகிறது என்று அமைச்சர் சுரேந்திரன் கூறினார். “அரசாங்கம் தனது கருத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் நாங்கள் முன்னிலை வகித்தோம். அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை. 2019 தீர்ப்பில், தெளிவின்மை உள்ளது. நாங்கள் மட்டும் அப்படிச் சொல்லவில்லை. தெளிவின்மை இன்னும் உள்ளது. இன்றைய சம்பவங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீற விரும்பும் நபர்கள் இருப்பதைக் காட்டுகின்றன.” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றம் அதன் 2018 ஆம் ஆண்டு உத்தரவை அது நிறுத்தவில்லை என்றாலும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தனது தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை ஒரு பெரிய அமர்விற்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கேரள அரசு ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்து, சபரிமலை செயல்பாட்டிற்கான இடம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு பெண் பக்தர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவர்கள் சன்னதிக்கு அருகில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து 12 வயது சிறுமி உட்பட பல பெண்கள் சன்னதியிலிருந்து வெளியே திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு நவம்பர் 16 ம் தேதி மாலை ‘மண்டல பூஜை-மகரவிளக்கு’ திருவிழாவிற்கு சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் 27 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கருவறை மூன்று நாட்கள் மூடப்படும். பின்னர், டிசம்பர் 30 அன்று மீண்டும் திறக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.