25 வருடங்கள் கழித்து, குஜராத் கடற்பகுதியில் ஜூன் மாதத்தில் பிபோர்ஜாய் புயல் முதல்முறையாக கரையை கடக்க உள்ளது.
பிபோர்ஜாய் புயல், குஜராத்தை கடக்கும் 5 வது பெரிய புயல் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 58 ஆண்டுகளில் அரபிக் கடலில் உருவாகும், 3 வது பெரிய புயல் இதுதான் என்று தரவுகள் தெரிவிக்கிறது.
மணிக்கு 119 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ள பிபோர்ஜாய் புயல், சவுராஷ்டிரா- கட்ச் மற்றும் பாங்கிஸ்தான் மந்த்வி, குஜராத் மற்றும் கராச்சி, பாகிஸ்தான் அருகே குஜராத்தின் ஜாக்கவு துரைமுகத்தில் கரையை கடக்கிறது.
வருகின்ற வியாழக்கிழமை மதியம் கரையை கடக்கிறது. இந்நிலையில் காற்றின் வேகம் 125 முதல் 135 கி.மீ வேகத்தில் வீசலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திங்கள் கிழமை காலை 8.30 மணி வரை, போர்பந்தரின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 320 கி.மீ துரத்திலும், துவாரகாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 360 கி.மீ துரத்திலும், ஜாக்காவு துரைமுகத்திலிருந்து தெற்கில் 440 கிமீ தூரத்திலும், நளியாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 440 கி.மீ தூரத்திலும், பாகிஸ்தானின் கராச்சியின் தெற்கு பகுதியில் 620 கிமீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
1891 முதல் இதுவரை 5 அதீவிர புயலை ( 89 முதல் 117 கி.மீ வேகம் ) குஜராத் சந்தித்துள்ளது. இந்நிலையில் தீவிர மற்றும் அதிக தாக்கம் கொண்ட புயல்கள் 1920, 1961, 1964 , 1996 மற்றும் 1998 உள்ளிட்ட ஆண்டுகளில் உருவாகி உள்ளன.
கடந்த 132 வருடங்களாக 16 காற்றழுத்த தாழ்வு மண்லம் மற்றும் புயல்கள் அரப்பிக் கடலில் தோன்றி குஜராத்திற்கு வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் புயலுக்கு பெயரிடுவது சமீக காலங்களாகத்தான் நடைபெறுகிறது. இந்நிலையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஒரு புயல் டையூ பகுதியில் ஜூன் 18, 1996ம் ஆண்டு கரையை கடந்துள்ளது. அதுபொல மணிக்கு 166 கி.மீ வேகத்தில் ஒரு புயல் போர்பந்தரில், ஜூன் 8, 1998ம் ஆண்டு கரையை கடந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil