சர்வேதேச மாணவர்கள் தினம் : அக்டோபர் 15ல் கொண்டாட காரணம் என்ன ?

விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ 'பற்றவைக்கப்பட்ட மனங்கள்'  ‘இந்தியா 2020' போன்ற புத்தகங்களின் மூலம் தனது எழுத்து திறமையையும் உலகத்திற்கு வித்திட்டார்

Abdul kalam Birthday Celebrated as World Students’ Day :  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாடிவருகிறோம் . மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதிலும், மாணவர்கள் சமூதயாத்தில் தனது வாழ் நாள் முழுவதும் நெருக்கத்தை நிலை நாட்டியவர் . இதன் வெளிப்பாடாக 2010 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 “உலக மாணவர் தினம்” என்று அறிவித்தது.

புகழ்பெற்ற விஞ்ஞானியான கலாம் இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தியவர் என்றாலும், இந்த உலகிற்கு கல்வி போதிக்கும் மனிதாராகவே தன்னை அடையாளம் காட்ட விரும்பியவர் அப்துல் கலாம்.

1998 இல் போக்ரான்- II அணுசக்தி சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம்  ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.  2005 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டிற்க்கு விஜயம் செய்த கலாமின் நினைவை அடையாளப்படுத்தும் விதமாக மே 26ம் தேதியை அந்நாடு  ‘அறிவியல் தினம்’ என்று கொண்டாடி மகிழ்கிறது.

கலாமுக்கு வழங்கப்பட்ட விருதுகளின் நீண்ட பட்டியலை இந்நாடு அறியும். 1981 இல் பத்ம பூஷண் விருதும், 1990 ல் பத்ம விபூஷன் விருதையும் சொந்தமாக்கியவர் கலாம். அறிவியல் துறையில் ஆராய்ச்சி  மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) போன்றவைகளின் பங்களிப்புகளுக்காக அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லா புகழுக்கும் சொந்தக்காரரான அப்துல் கலாமின் பெரும் சாதனையாகக் கருதப்படுவது போக்ரான் அணு குண்டை வெற்றிகரமாக சோதனை செய்ததாகும்.  இந்த அறிவியல் விங்ஞானி, ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’  ‘இந்தியா 2020′ போன்ற புத்தகங்களின் மூலம் தனது எழுத்து திறமையையும் உலகத்திற்கு வித்திட்டார்.

தனியார் பேருந்துகள் டிக்கெட் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஷில்லாங்கின் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) இல் உரை நிகழ்த்துமபோது தனது இறுதி மூச்சுக் காற்றை சுவாசித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close