Advertisment

பிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்!

உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் தங்கள் பகுதியில் பிரியாணி விற்பனை செய்தவர் மீது  மூன்று பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
greater noida vendor beaten up viral video, Briyani seller attacked by 3 men, பிரியாணி விற்பனை செய்தவர் மீது தாக்குதல், கிரேட்டர் நொய்டா, பிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல் noida vendor thrashed viral video, noida news, greater noida news, Briyani seller attacked in Greater Noida

greater noida vendor beaten up viral video, Briyani seller attacked by 3 men, பிரியாணி விற்பனை செய்தவர் மீது தாக்குதல், கிரேட்டர் நொய்டா, பிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல் noida vendor thrashed viral video, noida news, greater noida news, Briyani seller attacked in Greater Noida

உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் தங்கள் பகுதியில் பிரியாணி விற்பனை செய்தவர் மீது  மூன்று பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் 43 வயது நபர் ஒருவர் பிரியாணி கடை நடத்தியவரை அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை தாக்கினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த வீடியோவில் முகம் மறைந்திருக்கும் ஒரு நபர் பிரியாணி விற்பனையாளரை முகத்தில் அறைந்து குத்துகிறார். தங்கள் பகுதியில் ஏன் பிரியாணி விற்பனை செய்கிறாய் என்றும் அதோடு அவரை சாதி ரீதியாக அவதூறான வார்த்தைகளால் திட்டுகிறார்.

இது குறித்து கௌதம் புத் நகர் போலீஸ் எஸ்.எஸ்.பி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “இந்த சம்பவம் சனிக்கிழமை சனிக்கிழமை மாலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் ஒரு நபர் சாதி ரீதியான வார்த்தைகள் பயன்படுத்துவதை கவனித்தோம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பேருக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி சட்டத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளோம். பிரியாணியின் விலை மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுராவில் இருக்கைகள் வைப்பது தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது.” என்று கூறினார்.

தாக்குதலுக்குள்ளான நபர் அளித்த புகாரில், மூன்று பேர் சனிக்கிழமை பிற்பகல் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் அவர்களை மறுத்தபோது, ​​அவர்கள் அவரை அறைந்து, சாதி ரீதியான வார்த்தைகளால் திட்டினார்கள் என்றும் இது குறித்து புகார் அளித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்திய பின்னர் அவர்கள் தப்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்”என்று அப்பகுதி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், “நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம். எங்கள் குழுக்கள் அவர்களை கைது செய்ய சோதனைகளை நடத்திவருகின்றனர்.” என்று கூறினார்.

Uttar Pradesh Noida
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment