Advertisment

ராமர் படம் அச்சிடப்பட்ட தட்டுகளில் பிரியாணி விற்பனை; கடைக்காரரை கைது செய்த டெல்லி போலீஸ்

ராமர் படம் அச்சிடப்பட்ட தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்ததாக புகார்; கடைக்காரரை கைது செய்த டெல்லி போலீஸ்; அடுத்த நாள் விடுவிப்பு

author-image
WebDesk
New Update
biryani

ராமர் படம் அச்சிடப்பட்ட தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்ததாக புகார்; கடைக்காரரை கைது செய்த டெல்லி போலீஸ் (புகைப்படம் - பெக்ஸல்ஸ்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராமர் படம் பொறிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்தாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் உள்ள ஒரு கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீஸார் சிறிது நேரம் கைது செய்து வைத்திருந்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Biryani served on paper plate ‘bearing picture of Lord Ram’ sparks row; shopkeeper briefly detained

கடைக்காரர் ஒரு தொழிற்சாலையில் இருந்து மொத்தமாக 1,000 தட்டுகளை வாங்கியிருந்தார்; இவற்றில் சிலவற்றில் மட்டுமே ராமரின் படம் அச்சிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர். மேலும் தட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் காகிதம் ராமாயணம் தொடர்பான புத்தகத்தின் அட்டையில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மதியம் பிரியாணி கடைக்கு முன் சிறு கும்பல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதாக போலீஸாருக்கு அழைப்பு வந்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து கூட்டத்தினரை சமாதானப்படுத்தி போலீசார் நடவடிக்கை எடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

“காவல்துறையினர் கடையில் ராமர் படம் அச்சிடப்பட்ட இரண்டு மூன்று தட்டுகளைக் கண்டுபிடித்தனர்; இரண்டை அவர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே விற்றிருந்தார்... மொத்தமாக தட்டுகளை வாங்கியபோது கடைக்காரர் ராமர் படத்தை கவனிக்கவில்லை,” என்று வடமேற்கு டி.சி.பி ஜிதேந்திர மீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

போலீசார் அந்த கடைக்காரரை கைது செய்து, IPC பிரிவு 107/151 (தடுப்பு காவல்) கீழ் காவலில் வைத்து அடுத்த நாள் அவரை விடுவித்தனர். காவல்துறையால் முறையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ram Delhi Briyani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment