கேரள கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: கைதான பிஷப் பிரோங்கோவுக்கு நெஞ்சுவலி!

புகார் அளித்த கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது குறித்தும் கேட்கப்பட்டது.

புகார் அளித்த கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது குறித்தும் கேட்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிஷப் பிரோங்கோ

பிஷப் பிரோங்கோ

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜலந்தர் பிஷப் பிராங்கோ திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

பிஷப் பிரோங்கோ:

கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மீது அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், பிஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து அவரிடம் நேரடியாக விசாரித்து வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி பிஷப் பிராங்கோ விசாரணைக்கு நேரில் ஆஜரானர்.  அவரிடம் எஸ்பி ஹரிசங்கர் மற்றும் வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் தீவிர  விசாரணை நடந்தது. 2 நாட்களாக போலீசார் பிஷப்பிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

Advertisment
Advertisements

3வது நாளாக நேற்று நடைப்பெற்ற விசாரணையில்,  பிஷப்  கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்யவில்லை என்று கூறினார்.  ஆனால் பிஷப்புக்கு எதிராக போலீசார் திரட்டிய 10க்கும் மேற்பட்ட வலுவான ஆதாரங்களை முன் வைத்தனர்.. இதனால் பிஷப்பால் எந்த பதிலும் கூற முடியவில்லை.

இதற்கிடையே,பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது. தையடுத்து மாலை 5 மணியளவில் பிஷப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக திருப்புணித்துறா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது திடீரென பிஷப் பிரோங்கோவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிக்கிசை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நிலை சீராக இருப்பதால் விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிஷப் பிராங்கோவிடம் 2வது நாள் விசாரணையில், புகார் அளித்த கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது குறித்தும் கேட்கப்பட்டது.

பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2016 செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடியில் அமைந்துள்ள ஒரு தியான மையத்திற்கு சென்று தான் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கூறி பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.இதை அவர் போலீசில் வாக்குமூலம் அளிக்கும் போது கூறியிருந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அட்டப்பாடி சென்று தியான மையத்தில் பாதிரியாரை சந்தித்து கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பாதிரியார் பாவமன்னிப்பு கேட்ட விவரங்களை வெளியே கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

கடந்த ஜூன் 28ம் தேதி பிஷப் பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்து 86வது நாளில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதற்கிடையே பிஷப்பை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்றே பாலா நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: