தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (SP) தலைவர் சுப்ரியா சுலே மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் இணைய குற்றத்தடுப்பு போலீஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI), மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2024க்கு வாக்குப்பதிவுக்கு முன்னதாக செவ்வாய்கிழமை, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவீந்திரநாத் பாட்டீல் மற்றும் பா.ஜ.க மீது பிட்காயின் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Bitcoin misappropriation claim: Supriya Sule denies audio clips, Ajit Pawar says he identifies her voice
பாராமதி எம்.பி.யான சுப்ரியா சுலே மற்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் மீது ரவீந்தரநாத் பாட்டீல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அவர்கள் 2018 ஆம் ஆண்டு கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் இருந்து பிட்காயின்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும், நடந்துகொண்டிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு நிதியளிக்க பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். பிட்காயின்களை பணமாக்குவதன் மூலம் தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் சதியில் சுப்ரியா சுலே மற்றும் நானா படோல் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு குரல் குறிப்புகளை பா.ஜ.க பின்னர் வெளியிட்டது.
“நேர்மையான வாக்காளர்களைக் கையாள தவறான தகவல்களைப் பரப்பும் பழக்கமான தந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு ஒரு நாளுக்கு முந்தைய இரவில் பயன்படுத்தப்படுகின்றன. பிட்காயின் முறைகேடு தொடர்பான போலியான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம் மற்றும் சைபர் கிரைம் துறையிடம் கிரிமினல் புகார் அளித்துள்ளோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படும் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் நடைபெறுவதைக் கண்டிக்க வேண்டும், இதற்குப் பின்னால் உள்ள உள்நோக்கம் மற்றும் மோசமான செயல்கள் தெளிவாகத் தெரிகிறது,” என்று சுப்ரியா சுலே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க தலைவர் சுதன்ஷு திரிவேதி குற்றச்சாட்டுகளை வலுப்படுத்திய பிறகு, சுப்ரியா சுலே கூறினார், "சுதன்ஷு திரிவேதி என் மீது சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்." இவை அனைத்தும் யூகம் மற்றும் பொய்யானவை என்றும், எந்தவொரு பா.ஜ.க பிரதிநிதியுடனும் அவர்கள் விரும்பும் நேரத்தில் பொது விவாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் சுப்ரியா சுலே கூறினார்.
சுப்ரியா சுலேவின் உறவினரும் துணை முதல்வருமான அஜித் பவாரும் அவரைத் தாக்கினார். “ஆடியோ கிளிப்களில் உள்ள தொனியில் இருந்து, என்னால் குரல்களை அடையாளம் காண முடிகிறது. அவர்களில் ஒருவர் என் சகோதரி, மற்றொருவர் நான் அதிகமாகப் பணியாற்றியவர். விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவரும்” என்று அஜித் பவார் புதன்கிழமை காலை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா காங்கிரஸின் பொதுச் செயலாளரான வழக்கறிஞர் ரவி ஜாதவ், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையம் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ரவீந்திரநாத் பாட்டீல் மற்றும் பா.ஜ.க.,வுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை இரவு புகார் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“