கணவன் – மனைவி உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் விநோத போட்டி

ஆனால், ஜார்க்கண்டில் இதனை உடைக்கும் விதமாக, கணவன் – மனைவி பொது இடத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் வகையில் திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

காதல் ஜோடிகள், கணவன் – மனைவி ஆகியோர் பொது இடங்களில் தங்கள் காதலை பொது இடத்தில் வெளிப்படுத்திக் கொள்ளுதல், குறிப்பாக முத்தமிட்டுக் கொள்ளுதல் மற்றவர்களுக்கு முக சுளிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. பொது இடங்களில் அவ்வாறு செய்யக்கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஜார்க்கண்டில் இதனை உடைக்கும் விதமாக, கணவன் – மனைவி பொது இடத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் வகையில் திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் பக்கூர் மாவட்டத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், பழங்குடியினத்தை சேர்ந்த 18 தம்பதிகள் பங்கேற்று உதட்டோடு உதடு இணைத்து முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இது ஒரு போட்டியாக நடத்தப்பட்டது. கிராம மக்கள் அனைவரது முன்னிலையிலும் இந்த திருவிழா நடைபெற்றது.

பழங்குடியினரிடையே அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள் காரணமாக இவ்வாறு நடத்தினால், அந்த எண்ணிக்கை குறையும் என, அத்தொகுதி எம்.எல்.ஏ.சிமன் மராண்டி தெரிவிக்கிறார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bizarre jharkhand organises kissing competition 18 couples lock lips in front of thousands of onlookers

Next Story
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார் ராகுல் காந்தி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express