ஏற்றுமதி வரிக்கு எதிரான போராட்டத்தில் வெங்காய விவசாயிகளுடன் பா.ஜ.க கூட்டணி கட்சி சேர்ந்துள்ள நிலையில், சேதத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க அரசாங்கம் முயற்சி செய்கிறது.
தேசிய கூட்டுறவு வேளாண் விற்பனை கூட்டமைப்பு (NAFED) கொள்முதலை தொடங்குமாறு கூறியது, மகாராஷ்டிராவின் உயர்மட்ட தலைவர்கள் விவசாயிகளை அணுகி, இந்த விவகாரத்தை எழுப்புவதாக உறுதியளித்தனர்.
வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவால், மகாராஷ்டிராவில் விவசாயிகளின் உடனடி எதிர்ப்பைத் தூண்டியதால், டெல்லி மற்றும் மும்பையில் ஆளும் கூட்டணி சேதத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது.
செவ்வாய்க்கிழமை முதல் வெங்காயம் கொள்முதலை மீண்டும் தொடங்க தேசிய கூட்டுறவு வேளாண் விற்பனை கூட்டமைப்பு (NAFED) அறிவித்திருப்பது இதன் அறிகுறியாகும்.
வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் இடையேயான எதிர்புக் குரல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரிடம் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசினார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யவும் விவசாயிகளிடம் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதற்காக நாசிக் மற்றும் அகமதுநகரில் கொள்முதல் மையம் திறக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2410 என்ற விலையில் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்யும்.
மகாராஷ்டிர உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான சாகன் புஜ்பால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஒரு வழியை ஆலோசிப்பதாக தெரிவித்தார். ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் சேர அஜித் பவாருடன் வெளியேறிய எட்டு எம்எல்ஏக்களில் ஒருவரான புஜ்பால், வெங்காயம் அதிகம் விளையும் முக்கிய மண்டலமான நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலா தொகுதியின் எம்எல்ஏ-வாக இருக்கிறார்.
ஏற்றுமதி வரி முடிவை எதிர்த்து வர்த்தகர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், திங்கள்கிழமை நாசிக்கில் உள்ள மொத்த சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு விவசாய அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வீதிகளில் இறங்கின, பல மாத சரிவுக்குப் பிறகு வெங்காயத்தின் விலை சரி செய்யப்பட்டபோது, மத்திய அரசின் முடிவு வந்ததாக விவசாயிகள் கோபமடைந்தனர்.
தேசிய கூட்டுறவு வேளாண் விற்பனை கூட்டமைப்பு (NAFED) மூத்த அதிகாரிகள் கூறியதாவது: பண்ணை அளவிலான கொள்முதல் தொடங்க 16 மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும், அதன் விலையை நிலைப்படுத்த தேசிய கூட்டுறவு வேளாண் விற்பனை கூட்டமைப்பு (NAFED) சுமார் 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்தது.
நாசிக்கைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பாரதி பவார், விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்றும், தேசிய கூட்டுறவு வேளாண் விற்பனை கூட்டமைப்பு (NAFED) கொள்முதலைத் தொடங்குவது குறித்து அவர்களுக்கு உறுதியளித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி வரி முடிவுகளில் அதிருப்தி அடைந்த பா.ஜ.க கூட்டணிக் கட்சியான ராயத் கிராந்தி சங்கதானா, முன்னாள் அமைச்சர் சதாபாவ் கோட் தலைமையிலான பண்ணை அமைப்பு ஆகும். அடுத்த இரண்டு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் திரும்பப் பெறாவிட்டால் மும்பைக்கு டிராக்டர் பேரணியைத் தொடங்கப்போவதாக சங்கதானா அமைப்பின் நாசிக் தலைவர் தீபக் பாகர் மிரட்டல் விடுத்துள்ளார். ‘இந்த முடிவு தவறானது’ என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மகாராஷ்டிர தலைவர் நானா படோலே, மத்திய அரசின் முடிவை விவசாயிகளுக்கு எதிரானது என்றும், விவசாயிகளுடன் காங்கிரஸ் நிற்கிறது என்றும் கூறினார்.
முன்னாள் எம்.பி ராஜு ஷெட்டி தலைமையிலான விவசாய சங்கமான ஸ்வபிமானி ஷேத்காரி சங்கதானா, என்.சி.பி தலைவர் சரத் பவாரை இந்த பிரச்னையில் அணுகியுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியப் பேரவையின் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புவதாக சங்கதானாவுக்கு பவார் உறுதியளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.