Advertisment

நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு; சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி; வார்த்தை மோதலில் காங்கிரஸ், பா.ஜ.க.!

நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவர் கூறிய நிலையில், சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி, ராகுல் காந்தி ஒர் பைத்தியம் என பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
BJP answers poison with poison After Kharge calls Modi a snake BJP calls Sonia vishakanya

சோனியா காந்தி சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜென்ட் என்றும் பசங்கவுடா பாட்டீல் யத்னால் குற்றம் சாட்டினார்.

கர்நாடக பாஜக தலைவர் பசங்கவுடா பாட்டீல் யத்னால், வியாழக்கிழமை (ஏப்.27), காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு "விஷகன்யா" என்றும், ராகுல் காந்தியை பைத்தியம் என்றும் கூறினார்.
மேலும், யெல்பர்காவில் நடந்த பேரணியில் பேசிய அவர், சோனியா காந்தி சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜென்ட் என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisment

அதாவது, “உலக தலைவரான நரேந்திர மோடியை கார்கே நாகப் பாம்புடன் ஒப்பிடுகிறார். அப்படியானால் சோனியா காந்தி விஷக் கன்னிதானே” என்றார்.
இந்த விஷக் கன்னி என்ற வார்த்தை பெண் கொலையாளிகளை குறிக்கும் ஓர் வார்த்தை ஆகும். முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்பு என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கார்கே தனது விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் பா.ஜ.க.விடம் இருந்து இந்த கடுமையான விமர்சனம் வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுத்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால், “ஒவ்வொரு தேர்தலிலும், அவர்கள் ஸ்ரீமதியை அவமதிக்க புதிய முறைகேடுகளை வீசுகிறார்கள்.

தன் வாழ்நாள் முழுவதையும் மிகுந்த கண்ணியத்துடனும் கருணையுடனும் நடப்பவர் சோனியா காந்தி. நமது தலைவர்களுக்கு எதிரான அசிங்கமான வார்த்தைகளால் பாஜக தொடர்ந்து புதிய தாழ்வுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. மோடி ஜி, இந்த வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Congress Vs Bjp Sonia Gandhi Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment