பா.ஜ.க.,வில் சேருமாறு மிரட்டல்; டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

பா.ஜ.க, என்னை அக்கட்சியில் சேரும்படி கேட்டுக் கொண்டது, இல்லையெனில் அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன் என்று மிரட்டியது; டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

பா.ஜ.க, என்னை அக்கட்சியில் சேரும்படி கேட்டுக் கொண்டது, இல்லையெனில் அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன் என்று மிரட்டியது; டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
athishi

டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி. (புகைப்படம்: X/@AtishiAAP இலிருந்து Screengrab)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவருமான அதிஷி, தன்னை பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு அக்கட்சியினர் அணுகியதாக செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: BJP asked me to join party or face ED arrest in next one month, claims AAP's Atishi

“பா.ஜ.க.வினர் தங்கள் கட்சியில் சேரும்படி என்னை அணுகியுள்ளனர். கட்சியில் சேராவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்து விடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். அவர்கள் எனது நெருங்கிய கூட்டாளி ஒருவர் மூலம் என்னை அணுகினர், மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க.,வும் ஆம் ஆத்மியை வீழ்த்தி அழிக்க விரும்புவதாகவும் கூறினார்கள்…” என்று அதிஷி கூறினார். 

பா.ஜ.க தனது தலைவர்களுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அஞ்சவில்லை என்றும் அதிஷி வலியுறுத்தினார். "உங்கள் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படவில்லை... நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். உங்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் பயப்பட மாட்டார்கள் என்பதை நான் பா.ஜ.க.,விடம் கூற விரும்புகிறேன். நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீரர்கள், பகத்சிங்கின் சீடர்கள், நாங்கள் சாவோம், துன்பப்படுவோம் ஆனால் உங்கள் வலையில் சிக்கி பா.ஜ.க.,வில் சேர மாட்டோம். அனைத்து தலைவர்களையும், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் நீங்கள் கைது செய்யலாம், ஆனால் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்,” என்று டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிஷி கூறினார்.

Advertisment
Advertisements

சத்யேந்தர் ஜெயின், மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய நான்கு முக்கிய தலைவர்களை கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மேலும் 4 தலைவர்களை கைது செய்ய பா.ஜ.க சதி செய்து வருவதாக அதிஷி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். .

”என்னையும், சௌரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதாவையும் கைது செய்யப் போகிறார்கள்... ஏனென்றால், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம் ஆத்மி உடைந்து விடும் என்று பா.ஜ.க நினைத்தது, ஆனால் மெகா இந்தியா கூட்டணி பேரணிக்குப் பிறகு ஆம் ஆத்மிக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. பா.ஜ.க இப்போது பயந்து விட்டது. எனவே, ஆம் ஆத்மி கட்சியின் மீதமுள்ள நான்கு மூத்த தலைவர்களை கைது செய்ய சதி செய்கிறது” என்று அதிஷி கூறினார்.

மேலும், விரைவில் எனது சொந்த வீடு, எனது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) ரெய்டு நடத்தப் போவதாகவும், அதன் பிறகு எங்கள் 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, பின்னர் கைது செய்யப்படுவோம் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதிஷி கூறினார்.

இந்தநிலையில், டெல்லி பா.ஜ.க செயலர் ஹரிஷ் குரானா செவ்வாயன்று, அதிஷியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரை அணுகியது யார் என்று கூற வேண்டும் அல்லது அவருக்கு எதிராக பா.ஜ.க பிரதிநிதிகள் காவல்துறையில் புகார் அளிப்போம் என்று கூறினார்.

'ஒரு புதிய நாள், ஒரு புதிய மனோகர் கஹானி; அதிஷி மீண்டும் ஒரு முறை மீடியா பரபரப்பை பரப்ப முயற்சித்துள்ளார்... இது ஒரு சவால் அதிஷி ஜி, எங்களுக்கு யார் என்று பெயரைக் கூறுங்கள் அல்லது பா.ஜ.க பிரதிநிதிகள் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிப்பார்கள்' என்று ஹரிஷ் குரானா கூறினார்.

’உங்கள் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், மாண்புமிகு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கிறார்... 14 மாதங்களாக... நீதிமன்ற உத்தரவுப்படி மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். சஞ்சய் சிங், விஜய் நாயர், கே.கவிதா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அமலாக்கத்துறை உத்தரவுகளால் அல்ல, நீதிமன்றங்களின் உத்தரவால் சிறையில் இருக்கின்றனர்,' என்று ஹரிஷ் குரானா வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியை வகிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கெஜ்ரிவால் சிறையிலிருந்து டெல்லியை ஆட்சி செய்து வருகிறார், சுனிதா அவரின் உத்தரவை அமைச்சரவைக்கு அனுப்பி வருகிறார். திங்கட்கிழமை மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நிவாரணம் வழங்காததை அடுத்து, கெஜ்ரிவால் திகார் சிறை எண் 2ல் அடைக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Delhi Aam Aadmi Party

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: