Advertisment

மணிப்பூர் விவகாரம்: ப.சிதம்பரம் மீது பா.ஜ.க தாக்கு; கார்கேவுக்கு ஜே.பி. நட்டா கடிதம்

ப.சிதம்பரத்தின் பரிந்துரை மோசமான நேரத்தில் வந்துள்ளது என ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chidambaram

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதில் மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்துகிறது என்றும் இந்த நெருக்கடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தையும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisment

"உங்கள் அரசாங்கம் வெளிநாட்டு நபர்களை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு குடியேறுவதை சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்லாமல், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று தோன்றுகிறது" என்றும் நட்டா கடிதத்தில் எழுதினார்.

சமீபத்தில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, பிரேன் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் ஒரு சமூக ஊடகப் பதிவை வெளியிட்ட பிறகு பாஜக காங்கிரஸுக்கு எதிராக இந்தத் தாக்குதலைத் திறந்துள்ளது. இருப்பினும் சிதம்பரத்தின் இந்த பதிவு பின்னர் டெலிட் செய்யப்ப்ட்டது. 

"மெய்தேய், குக்கி-சோ மற்றும் நாகா ஆகியவை உண்மையான பிராந்திய சுயாட்சியைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரே மாநிலத்தில் அனைவரும் ஒன்றாக வாழ முடியும்" என்று  சிதம்பரத்தின் பதிவில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் இந்த பதிவிற்கு காங்கிரஸில் இருந்தே எதிர்ப்பு வந்தது.  மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே மேகச்சந்திரா எதிர்ப்பு தெரிவித்தார். 

சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையைக் பற்றி பேசி அவர் மீதான வெப்பத்தைத் திசைதிருப்பும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் பிரேன் சிங். 

மணிப்பூர் பிரச்சனையின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் இருப்பதாக குற்றம் சாட்டிய பிரேன் சிங், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு போராளிக் குழுவான சோமி புரட்சி இராணுவத்தின் (ZRA) தலைவரான தங்க்லியன்பாவ் கைட் என்று கூறிக்கொள்ளும் ஒருவருடன் சிதம்பரம் கைகுலுக்கியதாகக் கூறப்படும் படத்தைப் பகிர்ந்து குற்றஞ்சாட்டினார். 

கெய்ட் ஒரு மியான்மர் நாட்டவர் என்று பைரன் வாதிட்டார், மேலும் இது சிதம்பரம் சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரித்ததைக் காட்டுகிறது என்றார். நட்டா பின்னர் சிதம்பரம் "வெளிநாட்டினர்" இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்ததாகவும், தீவிரவாத குழுக்களுடன் செயல்பாட்டு இடைநிறுத்த (SoO) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் காங்கிரஸ் இந்த படத்தை மறுத்தது. சிதம்பரம் சூட் அணிந்திருப்பதால், பிரேன் சிங் பகிர்ந்துள்ள படம் அந்தக் காலத்திலிருந்ததாக இருக்க முடியாது என்று மறுத்தது. 

இந்தியாவில் அரசியல் அல்லது அதிகாரப்பூர்வ சந்திப்புகனின் போது அவர் ஒருபோதும் சூட் அணிவதில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆங்கிலத்தில் படிக்க:   Decode Politics: Does BJP attack on P Chidambaram over Manipur crisis hold water?

சிதம்பரம் பதிவை நீக்க காங்கிரஸ் கூறியது ஏன்?

இது மணிப்பூரில் உள்ள தற்போதைய சூழ்நிலையுடன் தொடர்புடையது, கட்சி சகாக்கள் கூட இனக் கோடுகளாகப் பிரிந்துள்ளனர். எனவே, கட்சிகள் முழுவதிலும் உள்ள மெய்தே சட்டமன்ற உறுப்பினர்கள் மெய்தேயின் நலன்களுக்காகப் பேசுகின்றனர், அதே சமயம் குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி பழங்குடியினரின் கோரிக்கைகளை எழுப்புகின்றனர்.

மணிப்பூரில் உள்ள குக்கிகள் மற்றும் நாகாக்களுக்கு "உண்மையான பிராந்திய சுயாட்சி" என்ற சிதம்பரத்தின் பரிந்துரை மெய்தியர்களுக்குப் பிடிக்கவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன - சிதம்பரம் தனது பதிவில் மெய்திகளை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment