Advertisment

'குதிரை பேரத்தில் ஈடுபட பா.ஜ.க முயற்சி’: எம்.எல்.ஏ-க்களை ஐதராபாத் அனுப்பி வைத்த பீகார் காங்கிரஸ்

தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் பீகார் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நேற்று தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
BJP bid to split party 16 Bihar Congress MLAs flown to Hyderabad Tamil News

ஜார்கண்ட் அண்டை மாநிலமான பீகாரில் உள்ள காங்கிரஸின் 19 எம்.எல்.ஏ-க்களில் 16 பேர் டெல்லியில் இருந்து ஐதராபாத்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Congress | Bihar: 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல், மே நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வட மாநிலங்களில் நடக்கும் அரசியல் வளர்ச்சி தேர்தல் நேரத்தில் பரபரப்பை கொண்டு வந்துள்ளன. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதனால், சம்பாய் சோரன் கடந்த சனிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். 

Advertisment

இந்நிலையில், ஜார்கண்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஆளும் கூட்டணி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் காங்கிரஸின் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேரும் நேற்று இரவு ராஞ்சிக்கு திரும்பினர்.

எம்.எல்.ஏ-க்களை ஐதராபாத் அனுப்பி வைத்த பீகார் காங்கிரஸ் 

இந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் அண்டை மாநிலமான பீகாரில் உள்ள காங்கிரஸின் 19 எம்.எல்.ஏ-க்களில் 16 பேர் டெல்லியில் இருந்து ஐதராபாத்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வருகிற 12 ஆம் தேதி பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் பீகார் மாநில காங்கிரஸ் தங்களது எம்.எல்.ஏ.க்களை நேற்று தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்குள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“எங்கள் கட்சியை பிளவுபடுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக சில காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். அவர்கள் முதலில் டெல்லிக்கு கட்சி தலைமையால் அழைக்கப்பட்டனர்,” என்று பீகார் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், "ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மாநிலம் முழுவதும் பயணம் செய்ததில் இருந்து கட்சி பிளவுபடும் என்ற அச்சத்தில் இருந்தது." என்றார். 

பீகார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்க்கு விமானத்தில் அனுப்பப்பட்டதை உறுதிசெய்துள்ள செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “டெல்லி சென்ற எங்கள் எம்.எல்.ஏ.க்கள், அங்கிருந்து ஐதராபாத் செல்ல விருப்பம் தெரிவித்தனர். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பாட்னாவுக்கு வருவார்கள்." என்று கூறினார். 

பா.ஜ.க மூத்த தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா ​​கூறுகையில், “காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ-க்களை கொத்தடிமைகளாக நடத்துகிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும்." என்று கூறினார். 

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் 253 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 128 எம்.எல்.ஏ-க்களுடன் பெரும்பான்மை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Congress Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment