உத்தரப் பிரதேசம் மேற்கு மாவட்டங்களில் பிப்ரவரி 10, 14 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில், பாஜகவினரின் வாகனங்களுக்கு கருப்பு கொடி காட்டுவது, கல் எறிவது, சேற்றை வீசியது என பல சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.
அதில் ஒன்று, பாஜக சிவால்காஸ் வேட்பாளர் மனிந்தர்பால் சிங், சூர் கிராமத்தில் பயணித்த போது, அவரை தாக்கிய 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 65 பேர் அடையாளம் காணப்படமுடியவில்லை. சிங் புகாரளிக்காத நிலையில், காவல் துறையினர் சொந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிங் சண்டே எகஸ்பிரஸூக்கு கூறுகையில், எனது வாகனத்தை பாலோ செய்து ஏழு வாகனங்கள் வந்து, கல் ஏறிந்தும் நான் புகாரளிக்கவில்லை. அவர்கள் எனது சொந்த மக்கள். நான் அவர்களை மன்னிக்கிறேன். ஆனால் ஜனநாயக நாட்டில் வாக்கு சேகரிக்க வருபவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றார்.
காவல் துறை கூற்றுப்படி, கல் ஏறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி கொடிகளை வைத்திருந்ததாகவும், கிடைக்கும் வீடியோ காட்சிகள் மூலம் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.
வரவிருக்கும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் RLD அமைத்த கூட்டணி மூலம், யாதவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஜாட்களின் வாக்குகளை ஒன்றாக இணைக்க முடியும் என கருதியுள்ளனர்.
2013 முசாபர்நகர் கலவரத்தால் முஸ்லிம்கள் மற்றும் ஜாட் சமூகத்தினரிடையே உருவான பிளவு காரணமாக, பாஜக அதிகப்படியான இடங்களை பிடித்தது. ஆனால், இம்முறை வேளாண் சட்டங்களால் அதிருப்தியடைந்த மேற்கு உபி மக்கள், பாஜக மீது கோபத்தில் உள்ளனர். மேற்கு உ.பி., அரசியலில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்திய ஜாட் சமூகத்தின் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது. டெல்லியில் ஜாட் தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேசினார். அப்பகுதி முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறன்றனர்.
முன்னதாக, வியாக்கிழமை மாலை, பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ-வும் முசாபர்நகரின் கட்டௌலி வேட்பாளருமான விக்ரம் சைனி, அவரது தொகுதியில் உள்ள பைன்சி கிராமத்தில் பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
அப்போது, அவரிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று போராட்டக்காரர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil