பொது மக்களுடன் வேட்பாளர்கள் எவ்வளவு நன்றாக தொடர்பு கொண்டிருந்தனர்? பிரச்சாரத்தில் அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு பிரச்சினைகளின் தாக்கம் என்ன? மத்திய மற்றும் மாநில அரசின் முடிவுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? போன்ற கேள்விகளை முன்வைத்து மதிப்பாய்ஹவ நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணங்களைக் கண்டறிய பாஜக தயாரித்த சரிபார்ப்புப் பட்டியலில் இந்தக் கேள்விகள் உள்ளன.
இந்த தேர்தலில் மாநிலத்தில் அக்கட்சி குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. 2019-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றற நிலையில் இம்முறை 33 ஆகக் குறைத்துள்ளது, அதே நேரத்தில் அதன் வாக்கு விகிதம் 49.98% இலிருந்து 41.37% ஆகக் குறைந்துள்ளது.
பல தொகுதிகளை இழந்ததற்கான காரணங்களை அக்கட்சி ஆராயும், வாரணாசி மற்றும் லக்னோவைத் தவிர, அதுவும் அதன் கூட்டணி கட்சிகளும் தக்கவைத்துக்கொண்ட இடங்களையும், ஆனால் அவர்களின் வெற்றி வித்தியாசம் எங்கே குறைந்துள்ளது என்பதையும் ஆராயும்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியை தக்கவைத்தார், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவை தக்கவைத்தார். இருப்பினும், அவர்களின் வெற்றி வித்தியாசம் குறைந்தது.
பாஜக மூத்த மாநிலத் தலைவர்களை மறுஆய்வு செயல்முறைக்கு நியமித்துள்ளது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதியின் ஒவ்வொரு சட்டமன்றப் பகுதியையும் பார்வையிட அறிவுறுத்தி உள்ளது. ஜூன் 25ம் தேதிக்குள் தங்கள் அறிக்கையை மாநில தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் மாநில தலைமை மத்திய தலைமைக்கு அறிக்கை அனுப்பும்.
பா.ஜ.க செக் லிஸ்ட்டில் இடம்பெற்ற கேள்விகள்
1. களத்தில் கட்சித் தொண்டர்கள் எவ்வளவு ஆக்டிவ் ஆக செயல்பட்டனர்?
2. மத்திய மற்றும் மாநில அரசின் முடிவுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா?
3. பொது மக்களுடன் வேட்பாளர்கள் எவ்வளவு நன்றாக தொடர்பு கொண்டிருந்தனர்?
4. தங்கள் சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே கட்சித் தலைவர்களின் இயக்கம் என்ன?
5. தோல்வியடைந்த யூகங்கள் என்ன?
6. ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் ஏன் கட்சியிலிருந்து விலகிச் சென்றார்கள்?
7. இந்து வாக்காளர்கள் ஏன் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டனர்?
8. விளம்பரப் பொருட்கள் எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்பட்டன?
9. என்ன வளங்கள் இருந்தன?
10. அமைப்புக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு எப்படி இருந்தது? உள்பட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
களத்தில் மதிப்பாய்விற்கு செல்லும் போது, பாஜக தலைவர்கள் மண்டல் பிரிவுத் தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து இந்தப் புள்ளிகள் குறித்து கருத்து சேகரிப்பார்கள். இது தவிர, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் எப்படி பிரச்சாரம் செய்தார்கள், அவர்கள் வசம் உள்ள ஆதாரங்கள் போன்ற தகவல்களையும் பாஜக தலைவர்கள் சேகரிப்பார்கள்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/bjps-checklist-for-up-debacle-what-factors-is-the-party-looking-at-9401040/
"பல்வேறு பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள விவரிப்புகள் மற்றும் அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீடு மீதான அவர்களின் பிரச்சாரத்தின் தாக்கம் பற்றியும் நாங்கள் கேட்க வேண்டும்" என்று மறுஆய்வு செயல்முறையுடன் தொடர்புடைய பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி அயோத்தியில் (பைசாபாத் தொகுதி) ஆய்வு மேற்கொள்கிறார், இது ராமர் கோயில் திறக்கப்பட்ட சில மாதங்களில் கட்சி இழந்த கௌரவப் போராகும். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காந்தி குடும்பத்தின் விசுவாசி கே.எல் ஷர்மாவிடம் தோற்ற அமேதியையும் அவர் மறுஆய்வு செய்வார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்ற மற்றொரு காங்கிரஸின் கோட்டையான ரேபரேலியை பகுதி மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) தரம்பால் சிங் மதிப்பாய்வு செய்வார் - அவர் வயநாட்டிலிருந்து ராஜினாமா செய்வதன் மூலம் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
கட்சியின் நிறுவன விவகாரங்களுடன் தொடர்புடைய மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், “முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கும் மேலாகியும், உ.பி.யின் முடிவுகள் தொடர்பாக மாநில அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் எந்த ஒரு கட்டமைக்கப்பட்ட சந்திப்பும் நடைபெறவில்லை. கடந்த வாரம் டெல்லியில் ஒரு பொது விவாதம் நடந்தது. ஆய்வுக் கூட்டங்களின் அறிக்கைகள் களத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவுடன், மாநில அரசு, மத்திய தலைமையகத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உடனான சந்திப்புகளுக்கு பாஜக தயாராகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.