/tamil-ie/media/media_files/uploads/2019/11/Ayodhya-759.jpg)
Ayodhya, Ayodhya News, Ayodhya Verdict, Ayodhya case Verdict, Ayothi Case,அயோத்தி தீர்ப்பு, Ayothi Judgement, ayothi ramar temple, ayothi result, புதிய ராமர் கோயில், அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும், ayothi ramar kovil, Ayodhya Verdict, New Ramar temple, to be managed by trust, supreme court verdict
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின் , கட்சித் தலைவர்களும் , தொண்டர்களும் கடைபிடிக்க வேண்டிய நடத்தை நெறிமுறைகளை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
தீர்ப்பு நாளன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்கள் வெளிவரும் வரை, கட்சியின் மற்றத் தலைவர்கள் யாரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று பாஜக வாரியக் கூட்டங்களை அமைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த திங்களன்று, நடத்தை விதிமுறைகள் குறித்து விவாதிக்க, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். பெங்களூருவிலும், கொல்கத்தாவிலும்,மும்பையிலும் அயோத்தி வழக்கு குறித்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து, மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், தீர்ப்பு நாளன்று, தலைவர்கள் என்ன செய்ய வேண்டடும், என்ன செய்யக்கூடாது.... போன்றவைகள் பட்டியாலாக தயாரித்துள்ளோம். தலைவர்கள் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. தீரப்பு வந்தபின், அரசு தரப்பிலிருந்து, பிரதமரும், பாஜக கட்சி சார்பில் இருந்து அதன் தலைவரும் அறிக்கையை வெளியிடுவார்கள். " என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17 ம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவர் தெரிவிக்கையில் , "அயோத்தி தீர்ப்பு தொடர்பாக பாஜக தலைவர்களின் நடத்தையை யாரும் விமர்சிக்காமல் இருக்க, ஒவ்வொரு மாநிலக் கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சித் தலைமையியிருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.
பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் " என்பதே பாஜக கட்சி தலைமையின் தகவலாக உள்ளது , ஏனெனில் இது ஒரு நீதித்துறை சார்ந்த விஷயம், சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு" என்றும் தெரிவித்தார் .
மத்தியில் பாஜகவின் ஆட்சி, மாநிலத்தில் பல்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றது. தீர்ப்பு அன்று நிலைமை கட்டுபடுத்த முடியாவிட்டால், பின் விளைவுகள் கடினமாக இருக்கும் என்று பாஜக யோசிக்கிறது. சர்வதேச நாடுகளும் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அயோத்திய தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அமைதியாக இருக்குமாறு தனது உருப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறித்தி இருந்தது . நவம்பர் 10 முதல் 20 வரையில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் அத்துனை நிகழ்சிகளும் இதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட அறிக்கையிலும் , உச்சநீதிமன்ற தீர்ப்பை "திறந்த மனதுடன்" அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது .
அக்டோபர் 27 ம் தேதி, தனது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “குறிப்பிட்ட சில அமைப்புகள் ” 2010 அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாக பதற்றத்தை உருவாக்கி, பிளவுகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஈடுபட்டனர், அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் முதிர்ச்சியுடன் செயல்பட்டு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்,அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது" என்றும் மோடி நினைவு கூர்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.