நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையின் போது மம்தா பானர்ஜியின் மீது நடந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்ட பெரும் சதியென்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
நேற்று, புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்த்திடம் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் புகார் மனுவை சமர்பித்தனர். இது, கடந்த மூன்று நாட்களில் சமர்பித்த இரண்டாவது புகார் மனுவாகும். முதலாவது, புகார் மனு கொல்கத்தா தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டது. நேற்றைய மனுவில், " சமூக ஊடகங்களில் பாஜக தலைவர்களின் அதிதீவிர கருத்துக்கள், மாநில காவல்துறை இயக்குநர் நீக்கம், பொய் சாட்சியம் ஆகியவற்றின் மூலம் மமதா பேனர்ஜி மீதான தாக்குதல் திட்டமிட்டு அரங்கேறியதாக குறிப்பிட்டது. .
இதற்கிடையே, கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மமதா பேனர்ஜி நேற்று மாலை வீடுதிரும்பினார்.
கட்சியின் மூத்த தலைவர்களான சவுகதா ராய், ககோலி கோஷ், டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட ஆறு திருணாமுல் எம்.பிக்கள் எழுதிய கடிதத்தில்," கடந்த மார்ச் 10 நந்திகிராமில் கட்சித் தலைவர் மமதா பேனர்ஜி மீது உயிரைப் பறிக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதிலும், பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிபடுகிறது என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்று மாலை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் அடங்கிய பாஜக பிரமுகர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து சுயாதீன விசாரணைக்கு கோரினார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட வேண்டும், நந்திகிராம் போன்ற பதற்றமான பகுதிகளில் சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திதம் வலியுறுத்தியதாக பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மார்ச் 8, அன்று, மாநில பாஜகவைச் சேர்ந்த திலீப் கோஷ் தனது முகநூல் பக்கத்தில், நந்திகிராம் தேர்தல் பரப்புரையின் போது மமதா பானர்ஜி தாக்கப்படுவது போன்ற கேலிச்சித்திர படத்தை வெளியிட்டார். அதே நேரத்தில்,டிஜிபி, ஐஜிபியை உடனடியாக நீக்கக் கோரி பாஜக தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக, மார்ச் 9, 2021 அன்று, டிஜிபி நீக்குவதாக தேர்தல் ஆணையம் திடிரென்று அறிவித்தது" என புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுரையை தொடர்ந்து ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.