'தமிழகத்தில் வட மாநிலத்தினர் மீது தாக்குதல்': பீகார் சட்டசபையில் சலசலப்பை கிளப்பிய பா.ஜ.க

பா.ஜ.க உறுப்பினர்கள், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளை சரிபார்க்க, சட்ட சபையின் உறுப்பினர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ஜ.க உறுப்பினர்கள், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளை சரிபார்க்க, சட்ட சபையின் உறுப்பினர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
BJP creates ruckus in Bihar assembly over 'attack on migrants' in Tamil Nadu Tamil News

BJP creates ruckus in Bihar assembly over attack on migrants in Tamil Nadu

Bihar assembly Tamil News: பீகார் சட்டசபையில் வெளிநடப்பு செய்வதற்கு முன் சலசலப்பை உருவாக்கிய எதிர்க்கட்சியான பாஜக, பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளை சரிபார்க்க, சட்ட சபையின் உறுப்பினர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது பீகாரில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் விஜய் குமார் சின்ஹா, பீகாரில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இளைஞர்கள் வேலையில் ஈடுபடுவது பற்றி அளித்த ஒத்திவைப்பு நோட்டீசு குறித்து சபாநாயகரின் கவனத்தை பெற ​​முயன்றார்.

இந்நிலையில், இன்று மதிய உணவு இடைவேளைக்கு முன் நடந்த கேள்வி நேரத்தில், மாநிலத்தின் 2023 - 2024 ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட் விவாதம் நடைபெறும் என ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில், இரட்டைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். மேலும், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் மூத்த அமைச்சர்க மற்றும் அரசு கருவூல அதிகாரிகள் அமர்ந்திருக்கும் பெஞ்ச்களின் முன்பு திரண்டு கோஷமிட்டும் பெரும் சலசலப்பை உருவாக்கியும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment
Advertisements

எதிர்க்கட்சிகளின் இந்த செயலை கண்டித்த சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி, பாஜக அரசியல் லாபம் ஈட்ட முயற்சிப்பதாகக் கூறி, அதற்கு ஒப்புதல் அளித்த மற்றும் தவறிய உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவருக்கு ஆலோசனை வழங்குமாறு அவர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, “அந்த மாநில முதல்வரின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் எங்கள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழகம் வந்ததில் அவர்களுக்குப் பிரச்சினை உள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைச் செய்திகள் உண்மையாக இருந்தாலும், இரு மாநில அதிகாரிகளும் உயரதிகாரிகளும் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா” என்று கூறினார்.

முன்னதாக, அவையில் இருந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், வன்முறை செய்திகளை தமிழ்நாடு டிஜிபி மறுத்ததை சுட்டிக்காட்டினார், மேலும் சரிபார்க்கப்படாத கூற்றுகளை தெரிவிப்பதாக பாஜகவை சாடி பேசினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Bihar India Bjp Nitish Kumar Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: