தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர ராவ்வின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அமலாக்கத் துறை சம்மன், தெலங்கானா தேர்தல், கே சந்திர சேகர் ராவ் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திடீர் ஆர்வம் ஏன்? இதற்கு முன்பு நீங்கள் இதுபோன்ற கோரிக்கையை முன்னெடுக்கவில்லையே?
நான் இதைப் பற்றி முன்பே பேசினேன், ஆனால் இப்போது (2024 பொதுத் தேர்தலுக்கு முன் இரண்டு பாராளுமன்ற அமர்வுகள் மட்டுமே உள்ளன.
பாஜக அரசு 303 எம்.பி.க்களுடன் இருப்பதால், மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியும். இது தொடர்பாக மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறேன்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் நீங்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நீங்கள் மசோதாவைப் பற்றி பேசுகிறீர்கள் என்று பாஜகவும், காங்கிரஸும் குற்றம் சாட்டுகின்றதே?
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் தங்கள் கருத்தை கூறுவதை தவிர்க்க இப்படி சொல்கிறார்கள். அதிக எம்.பி.க்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளது. அந்தக் கட்சி, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, பாஜக ஏன் அதை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும்.
அமலாக்கத் துறை (ED) உங்கள் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதே?
நான் ஒரு வலிமையான பெண். ED க்கு நான் பயப்படவில்லை. அவர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நானும் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் தற்போது ஜனநாயகத்தை ஒழிக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாறிவிட்டன. உண்மையான இலக்கு நான் அல்ல… பிஆர்எஸ் மற்றும் என் தந்தை கே சந்திரசேகர் ராவ் தான்.
மேலும், சட்டத்தில் இருந்து ஒளிந்துக் கொள்ள நான் பி.எல். சந்தோஷோ, கௌதம் அதானியோ அல்ல.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/