காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான நீடித்த சலசலப்பு, பாஜக தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பல்வேறு நிலைகளில் தேர்தல் நடத்தப்படும் ஒரே கட்சி பாஜக தான், குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவிக்கு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்: காங்கிரசில், நரசிம்மராவ்ஜி, சீதாராம் கேஸ்ரிஜி காலத்திலும், சோனியா தலைவராக இருந்த காலத்திலும் தேர்தல் நடந்தது. ஆனால், பாஜகவி தேர்தல் நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றார்.
சோனியா, 1998 முதல், ராகுல் பதவியில் இருந்த 2017-19 க்கு இடைப்பட்ட காலத்தைத் தவிர்த்து, காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு காங்கிரஸ் உள்கட்சி வாக்கெடுப்பை நடத்தியது.
அதே காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 தலைவர்களை பாஜக கண்டுள்ளது.
பிஜேபி அதன் தலைவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பாருங்கள்:
கட்சியின் அரசியலமைப்பு
தேசிய செயற்குழுவால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, பாஜகவின் தேசிய மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு’ மூலம் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஒரு மாநிலத்தின் தேர்தல் குழுவில் உள்ள எந்த 20 உறுப்பினர்களும், தேசியத் தலைவர் பதவிக்கு, நான்கு முறை செயல் உறுப்பினராக இருந்து, 15 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள எவரையும் கூட்டாக முன்மொழியலாம். ஆனால் அத்தகைய கூட்டு முன்மொழிவுகள் தேசிய கவுன்சிலுக்கான தேர்தல்கள் முடிந்த ஐந்து மாநிலங்களுக்கு குறையாமல் வர வேண்டும். வேட்பாளரின் ஒப்புதல் அவசியம்.
செயல்முறை
தேர்தலுக்கான செயல்முறை ஒரு சேர்க்கை இயக்கத்துடன் தொடங்குகிறது, தொடர்ந்து செயலில் உள்ள உறுப்பினர்கள், புதியவர்களைச் சரிபார்க்கிறார்கள்.
பின்னர், மண்டலத் தலைவர், மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத் தலைவர், அதைத் தொடர்ந்து இறுதியில் தேசியத் தலைவர் தேர்தலுக்கான செயல்முறையைத் தொடங்க, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பாஜக தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
ஜே பி நட்டா, ஜனவரி 2020 முதல்
முன்னாள் மத்திய அமைச்சரான நட்டா, வேட்புமனு தாக்கல் செய்த ஒரே தலைவராக, 2020 ஜனவரியில் ஒருமனதாக பாஜக தலைவராக ஆனார். நட்டா ஏற்கனவே கட்சியின் செயல் தலைவராக இருந்தார். ஜூன் 2019 இல் அமித் ஷா மத்திய மந்திரி பதவிக்காக, கட்சி பதவியை ராஜினாமா செய்த பின்னர் நட்டா பொறுப்பேற்றார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியை பாஜக பின்பற்றுகிறது.
அமித் ஷா, ஜூலை 2014-ஜூன் 2019
மத்திய அமைச்சரான பிறகு ராஜ்நாத் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, ஜூலை 2014 இல் அமித் ஷா தேசியத் தலைவரானார். ஜனவரி 2016 இல், 20 பாஜக மாநில யூனிட், அமித் ஷாவுக்கு ஆதரவாக 17 வேட்புமனுக்களை சமர்ப்பித்தன. 2018 ஆம் ஆண்டில், கட்சி அதன் உள் தேர்தலை ஒத்திவைத்தது, இது ஏப்ரல் 2019 இல் மக்களவை தேர்தல் வரை, அமித்ஷாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வழி வகுத்தது.
ராஜ்நாத் சிங், ஜனவரி 2013-ஜனவரி 2016
நிதின் கட்கரி தனது நிறுவனமான Purti குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் விலகியதை அடுத்து, ராஜ்நாத் சிங் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகள், பாஜகவின் நலன்களை மோசமாக பாதிக்க விரும்பவில்லை என்று கட்காரி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.காரராகக் கருதப்படும் கட்கரியின் வேட்புமனுவுக்கு பாஜகவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது என்ற ஊகங்களைத் தொடர்ந்து திடீர் வளர்ச்சி ஏற்பட்டது. உண்மையில், அந்த நேரத்தில், ஒரு பதவிக் காலத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இது கட்கரி மீண்டும் போட்டியிட உதவும் ஒரு வழியாகக் கருதப்பட்டது.
ராஜ்நாத் சிங்கின் பெயர் அதுவரை பட்டியலில் இல்லை, உண்மையில், ஒரு யஷ்வந்த் சின்ஹா தான் சாத்தியமான போட்டியாளராக தோன்றினார். ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதி ராம் லாலுடன், பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் சலசலப்பில் இறங்கினர், அதன் பிறகு ராஜ்நாத் சிங்கின் பெயர் “ஒருமித்த வேட்பாளராக” வெளிப்பட்டது.
நிதின் கட்கரி, டிசம்பர் 2009-ஜனவரி 2013
ராஜ்நாத் சிங்குக்குப் பதிலாக கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் நிதின் கட்கரி உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதனால் அவர் பதவி விலகினார். அவர் முறைப்படி பிப்ரவரி 2010 இல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார், அவருக்கு ஆதரவாக அனைத்து 13 வேட்புமனுக்களும் இருந்தன. 52 வயதில், அவர் பாஜகவின் இளைய கட்சித் தலைவராக ஆனார்.
ராஜ்நாத் சிங், டிசம்பர் 2005-டிசம்பர் 2009
2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா செய்த பிறகு, ராஜ்நாத் சிங் “ஒருமனதாக” பொறுப்பேற்றார்.
எல் கே அத்வானி, 2004-05
2004 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நாயுடு ராஜினாமா செய்த பிறகு அத்வானி பொறுப்பேற்றார்.
எம் வெங்கையா நாயுடு, 2002-2004
நாயுடு, 2001 மற்றும் 2002 க்கு இடையில் ஒரு குறுகிய கால பதவியில் இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பொறுப்பேற்றார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி, 2001-2002
குஷாபாகு தாக்ரேவிடம் இருந்து பொறுப்பேற்ற ஜனா, வாஜ்பாய் அரசில் மத்திய சட்ட அமைச்சரான பிறகு ராஜினாமா செய்தார். பிஜேபியின் முதல் தலித் தலைவர் பங்காரு லக்ஷ்மண் (2000-2001) ஊழல் குற்றச்சாட்டுகளால் ராஜினாமா செய்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தி முன்பு செயல் தலைவராக ஆனார்.
1980 இல் நிறுவப்பட்ட பாஜகவின் மற்ற தேசியத் தலைவர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் (1980-86) முரளி மனோகர் ஜோஷி (1991-93); மற்றும் குஷாபாவ் தாக்ரே (1998-2000) ஆகியோர் அடங்குவர். அத்வானி மூன்று முறை (1986-91; 1993-1998; 2004-05) அதிக காலம் தலைவராக பதவி வகித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“