Advertisment

தெற்கில் கவனம் செலுத்தும் பா.ஜ.க: 5 மாநிலங்களில் பிரதமர் மோடியின் வருகை அதிகரிப்பு; தமிழ்நாடு 2-வது இடம்

பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகாவிற்கு அதிகம் பயணம் செய்துள்ளார். அடுத்தபடியாக தமிழ்நாட்டிற்கு 39 முறை பயணம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Modi south.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தெற்கில் காலடி எடுத்து வைக்கும் பா.ஜ.கவின் உந்துதலைப் பிரதிபலிக்கும் வகையில், ஏப்ரலில் 19-ம் தேதி தொடங்கிய 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் 5 தென் மாநிலங்களுக்கான பயணங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்துள்ளது. 

Advertisment

மே 26, 2014 மற்றும் ஏப்ரல் 17, 2024-க்கு இடையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களுக்கு மோடி 146 முறை பயணங்களை மேற்கொண்டதாக பிரதமர் அலுவலகம் (PMO) இணையதளத்தில் உள்ள பதிவுகள் காட்டுகின்றன. 

 

அவர் தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்த மாநிலங்களுக்கு தலா 73 முறை பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களில் மூன்றில் ஒரு பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் வந்தவை - 2022 (13), 2023 (23) மற்றும் 2024 (23 முதல் ஏப்ரல் 17 வரை). ஒட்டுமொத்தமாக, இந்தக் காலகட்டத்தில் மோடி மேற்கொண்ட உள்நாட்டுப் பயணங்களில் தென் மாநிலங்களின் பங்கு அவரது முதல் ஆட்சிக் காலத்தில் 14% ஆக இருந்து இரண்டாவது காலத்தில் 18% ஆக உயர்ந்துள்ளது. 

PM-chart.webp

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்களித்தது. கேரளாவில் 2ஆம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் நான்காவது கட்டமாக மே 13ஆம் தேதியும் வாக்களிக்கின்றன. கர்நாடகாவில் ஏப்ரல் 26-ம் தேதி முதற்கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மே 7 அன்று மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று நிறைவடைகிறது. 

மோடி தனது முதல் பதவிக் காலத்தில் (2014-19) 520 மற்றும் இரண்டாவது (மே 2019க்குப் பிறகு) 408 உட்பட 928 உள்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன. இதில், பிரதமர் உ.பி.க்கு அதிகளவு (153) விஜயம் செய்துள்ளார், அதைத் தொடர்ந்து குஜராத் (87), மகாராஷ்டிரா (61), எம்பி (54), ராஜஸ்தான் (49), கர்நாடகா (45) ஆகிய இடங்கள் உள்ளன. இந்த ஆறு மாநிலங்கள் அவரது உள்நாட்டுப் பயணங்களில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டிருந்தன, அதே சமயம் உ.பி. மற்றும் குஜராத்தில் மட்டும் நான்கில் ஒரு பங்கிற்குச் சற்று அதிகமாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் அதிக அளவில் கர்நாடகாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (39) முறை , கேரளா (25) முறை , தெலங்கானா (22) மற்றும் ஆந்திரா (15) ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லோக்சபாவில் உள்ள 543 இடங்களில் ஐந்து மாநிலங்கள் 129 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், கர்நாடகாவைத் தவிர, அக்கட்சியின் முயற்சிகள் இதுவரை அதிக தேர்தல் பலனைத் தரவில்லை என்றாலும், இப்பகுதிகளில் காலடி எடுத்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

2019 லோக்சபாவில், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, மேலும் இந்த மூன்று மாநிலங்களிலும் கட்சியின் வாக்குகள் முறையே 0.97 சதவீதம், 12 சதவீதம் மற்றும் 3.6 சதவீதம். கர்நாடகாவில் 51 சதவீத வாக்குகளுடன் 25 இடங்களையும், தெலுங்கானாவில் 19.65 சதவீத வாக்குகளுடன் 4 இடங்களையும் வென்றது. 

PM-Map.webp

தென் மாநிலங்களுக்கு மோடி மேற்கொண்ட 146 பயணங்களில் 64 உத்தியோகபூர்வ மற்றும் 56 அதிகாரப்பூர்வமற்ற பயணங்கள் (தேர்தல் பேரணிகள் மற்றும் கட்சி செயல்பாடுகள்) அடங்கும் என்பதையும் பதிவுகள் காட்டுகின்றன. மொத்தத்தில், பிரதமர் தனது 146 முறை பயணத்தில் தென் மாநிலங்களுக்குச் சென்றபோது 356 நிகழ்வுகளில் கலந்து கொண்டார், அதில் அதிகபட்சம் 144 பொதுக் கூட்டங்கள் போன்ற அதிகாரப்பூர்வமற்றவை, 83 திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுதல் போன்ற வளர்ச்சி தொடர்பானவை ஆகும். 

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/political-pulse/pm-modi-visits-south-karnataka-andhra-telangana-kerala-9303877/

மற்ற மாநிலங்களில், மோடி மேற்கு வங்கத்திற்கு 43 முறை பயணம் செய்தார், அதைத் தொடர்ந்து பீகார் (42), ஜார்க்கண்ட் (31), உத்தரகாண்ட் (30), அசாம் (29), ஹரியானா (26), சத்தீஸ்கர் (24), ஜே&கே (25), இமாச்சலப் பிரதேசம் ( 20), ஒடிசா (21), பஞ்சாப் (18), கோவா (12), திரிபுரா 12 முறை பயணம் செய்துள்ளார். 

கோவிட் பாதிப்பை அடுத்து, 2020-ல் உள்நாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 23 ஆகக் குறைந்தது, இது மே 2014க்குப் பிறகு ஒரு காலண்டர் ஆண்டில் மிகக் குறைவு. அதன்பின், படிப்படியாக உயர்ந்து 2021ல் 61 ஆகவும், 2022ல் 98 ஆகவும், 2023ல் 108 ஆகவும், இருந்தது. 2024 ஆம் ஆண்டில், பிரதமர் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை 82 உள்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.

மொத்தத்தில், பிரதமரின் 928 உள்நாட்டுப் பயணங்களில், 460 அரசு முறை பயணம், 382  அரசுப் பணி அல்லாத பயணம்  மற்றும் 86 பயணங்கள் அரசு மற்றும் அரசு சாராத பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது (கட்சி பணிகள்). இந்த பயணங்கள் அனைத்தும் 696 நாட்களில் நடந்தன, ஏனெனில் அவர் பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment