வயநாடு பா.ஜ.க வேட்பாளர் அறிவிப்பு; பிரியங்கா காந்திக்கு எதிராக நவ்யா ஹரிதாஸ் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka andNavya

கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரியங்கா காந்தி முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி  அறிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: BJP fields Navya Haridas against Priyanka Gandhi in Wayanad Lok Sabha seat

பாஜக தரப்பில் இருந்து களமிறங்கும் நவ்யா ஹரிதாஸ், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

இது மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்படவுள்ள இடைத்தேர்தலுக்காக 24 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் சோனி போட்டியிடுகிறார்.

Advertisment
Advertisements

மேலும், கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் மகன் பாரத், அம்மாநிலத்தின் ஷிக்கான் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

நவம்பர் 13-ஆம் தேதியன்று, வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 14 மாநிலங்களில் காலியாகவுள்ள 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம், நந்தத் மக்களவை தொகுதி மற்றும் உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் சட்டமன்ற தொகுதிக்கு நவம்பர் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு நவம்பர் 23-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lok Sabha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: