பிரியங்கா காந்தி தான் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அது உண்மையா இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். தேவ்நரேன் கோவிலுக்குச் சென்று ஒரு உறையைக் கொடுத்தார், பின்னர் அதில் ரூ. 21 மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று பிரியங்கா காந்தி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: BJP goes to EC against Priyanka’s remarks on PM Modi’s temple visit
ராஜஸ்தானில் உள்ள தௌசாவில் அக்டோபர் 20-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா பேசியபோது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புதன்கிழமை புகார் அளித்துள்ளது.
பிரியங்கா காந்தி தான் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அது உண்மையா இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். தேவ்நரேன் கோவிலுக்குச் சென்று ஒரு உறையைக் கொடுத்தார், பின்னர் அதில் ரூ. 21 மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று பிரியங்கா காந்தி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.
பிரியங்கா காந்தியின் இந்த பேச்சு, பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட மத பக்தியையும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் அடிப்படை அடித்தளத்தை மீறியுள்ளது என்றும் அவருடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையே ‘நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்; அது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை” என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“முதலில், பிரியங்கா காந்தி தனது சொந்த மறுக்கமுடியாத ஒப்புதலின் மூலம், ஐ.பி.சி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் விதியை மீறியுள்ளார்” என்று பா.ஜ.க கூறியுள்ளது.
“பிரியங்கா காந்தி வதேராவின் சரிபார்க்கப்படாத, பொய்யான பேச்சுகள் இயலாகவே தீவிரமானவை, அவற்றை மன்னிக்க முடியாது” என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“