மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை புதிய மஹாயுதி அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்த குழப்பத்தின் தெளிவான அறிகுறியாக, மூத்த கூட்டணி கட்சியான பாஜக, ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் முதல்வராக அழுத்தம் கொடுத்து வரும் சில சிவசேனா தலைவர்களின் பரிந்துரைத்தபடி மகாராஷ்டிராவில் பீகார் மாடல் பொருந்தாது என நிராகரித்தது.
பீகாரில் என்.டி.ஏ கூட்டணியில் முதல்வராக உள்ள நிதிஷ் குமார் மற்றும் அங்கு கூட்டணி அரசு பற்றி சேனா முகாமின் ஆலோசனைகள் குறித்து கேட்டதற்கு, பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பீகார் மாடல் மகாராஷ்டிராவிற்குப் பொருந்தாது என்றார்.
14 வது சட்டமன்றத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் முதல்வர் பதவியில் இருந்து ஷிண்டே ராஜினாமா செய்த ஒரு நாளில் சுக்லாவின் கருத்துக்கள் வந்தன.
மேலும் புதிய ஆட்சி பதவியேற்கும் வரை காபந்து அரசின் முதல்வராக பொறுப்பேற்குமாறு ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜக 132 இடங்களையும், சிவசேனா 57 மற்றும் என்சிபி 41 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், ஷிண்டேவை மீண்டும் முதல்வராக்க கூறும் ஷிண்டே ஆதரவாளர்கள் கடைபிடிக்கும் "அழுத்தத் தந்திரங்களில்" டெல்லி பாஜக தலைமை மகிழ்ச்சியடையவில்லை என்று அறியப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: BJP firm on Devendra Fadnavis as CM: Bihar model doesn’t apply in Maharashtra
டெல்லியில் சிவசேனா தலைவர்களிடையே அதிகரித்து வரும் கூச்சல் “சரியாகவில்லை” என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “பட்னாவிஸை அடுத்த முதல்வராக்குவதற்கான முடிவை ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு உயர்மட்டத் தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது என்றார் . பாஜக மாநிலங்களவைக் கூட்டம் மும்பையில் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்றும், அங்கு முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“