நிர்மலா சீதாராமன் கையெழுத்தை பயன்படுத்தி ரூ. 2 கோடி மோசடியா? சிக்கலில் பாஜக பொது செயலாளர்!

தேர்தல் நேரத்தில் இது வீண் பழிப்போடுவதற்காகவே தொடரப்பட்ட வழக்கு

தேர்தல் நேரத்தில் இது வீண் பழிப்போடுவதற்காகவே தொடரப்பட்ட வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirmala Sitharaman’s sign

Nirmala Sitharaman’s sign

Nirmala Sitharaman’s sign: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்தை பயன்படுத்தி ரூ. 2 கோடி பண மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலத்தரகர் மஹிபால் ரெட்டியின் மனைவி பிரவர்னா ரெட்டி நேற்றைய தினம் சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில்,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பார்மா எக்ஸில் நிறுவனத்தின் தலைவராக மஹிபால் ரெட்டியை நீடிக்கச் செய்வதாக உறுதியளித்து 2.17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

இந்த புகாரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் போலியாக கையெழுத்திட்ட போலி நியமனக் கடிதத்தை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், ஆனால் பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், இதை பற்றி கேட்ட எங்களை முரளிதரராவ் ஆள் வைத்து மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், முரளிதரராவ் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறை, 406, 420, 468, 471, 506, 120-b,156 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடுத்த மாத மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த தேசிய பொதுச்செயலாளர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

Advertisment
Advertisements

எந்த நாட்டின் உதவியுமின்றி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது மிஷன் சக்தி - நிர்மலா சீதாராமன்

அதே நேரத்தில், முரளிதரராவ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் இது வீண் பழிப்போடுவதற்காகவே தொடரப்பட்ட வழக்கு என்றும் இதற்கு தான் எந்த பதிலும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மோசடி புகார்களில் சிக்கும் பாஜக நிர்வாகிகள் மீது கட்சியின் நடவடிக்கை பாயும் என்றும் பாஜக தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: