/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-13.jpg)
modi,loksabha election results 2019, election results, loksabha elections, bjp, congress, majoritym victory, மோடி, பாரதிய ஜனதா, வெற்றி
லோக்சபா தேர்தலில், 542 தொகுதிகளில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 340க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.
குஜராத் மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை போட்டியிட்டார். மோடி 5லட்சத்து 83 ஆயிரத்து 14 வாக்குகள் பெற்று 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவை வீழத்தி வெற்றி பெற்றார்.
இதனிடையே, காந்திநகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோடியின் தாயார் ஹீராபென், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த வீடியோ, நெட்டிசன்களால், சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் தாயார் நன்றி தெரிவிக்கும் வீடியோ...
Gujarat: Prime Minister Narendra Modi's mother Heeraben Modi greets the media outside her residence in Gandhinagar. pic.twitter.com/yR2Zi9eeL1
— ANI (@ANI) May 23, 2019
2014 லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ. கட்சி, இந்த தேர்தலில் 340க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி 50 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.