ஆளும் பா.ஜ.க 2022-23ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ. 1300 கோடியைப் பெற்றுள்ளது, இது அதே காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் பெற்றதை விட ஏழு மடங்கு அதிகம்.
ஆங்கிலத்தில் படிக்க: BJP got nearly Rs 1300 cr through electoral bonds in 2022-23, over 7 times what Cong received
2022-23 நிதியாண்டில் பா.ஜ.க. பெற்ற மொத்த நிதி 2120 கோடி ரூபாயாக இருந்தது, இதில் 61 சதவீதம் தேர்தல் பத்திரங்களில் இருந்து வந்ததாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சியின் வருடாந்திர தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
2021-22 நிதியாண்டில், கட்சியின் மொத்த வருவாய் 1775 கோடி ரூபாய்.
2021-22 நிதியாண்டில் ரூ.1917 கோடியாக இருந்த கட்சியின் மொத்த வருமானம் 2022-23ல் ரூ.2360.8 கோடியாக இருந்தது.
மறுபுறம், காங்கிரஸ் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி சம்பாதித்தது, இது 2021-22 நிதியாண்டில் ரூ.236 கோடியாக இருந்தது.
பா.ஜ.க.,வும் காங்கிரஸும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்.
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சி, 2021-22ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.3.2 கோடி சம்பாதித்துள்ளது. 2022-23ல், இந்தப் பத்திரங்களிலிருந்து எந்தப் பங்களிப்பும் இல்லை.
மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, 2022-23ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34 கோடி சம்பாதித்தது, இது முந்தைய நிதியாண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.
வட்டி மூலம் பா.ஜ.க 2021-22ல் ரூ.135 கோடி சம்பாதித்த நிலையில், கடந்த நிதியாண்டில் வட்டி மூலம் ரூ.237 கோடி சம்பாதித்துள்ளது.
‘தேர்தல் மற்றும் பொதுப் பிரச்சாரத்துக்கான’ மொத்தச் செலவில், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்காக பா.ஜ.க ரூ.78.2 கோடியை செலுத்தியுள்ளது, இது 2021-22ல் ரூ.117.4 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
கட்சி வேட்பாளர்களுக்கு நிதி உதவியாக ரூ.76.5 கோடி செலுத்தியது, இது 2021-22ல் ரூ.146.4 கோடியாக இருந்தது. ‘மொத்த செலவினங்கள்’ என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி உதவியை கட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“