Advertisment

தேர்தல் பத்திரம் ரத்து: பா.ஜ.கவுக்கு கடந்த நிதி ஆண்டில் 87% நன்கொடை உயர்வு; மற்ற கட்சிகள் நிலை என்ன?

கடந்த ஆண்டு பிப்ரவரியில், தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் செய்யத நிலையில், தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi amith

தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரியில், தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது,

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுக்கு நன்கொடைகள் அதற்கு முந்தைய ஆண்டை விட 87% அதிகரித்து ரூ.3,967.14 கோடியை எட்டியது. அதே நேரத்தில் கட்சியின் மொத்த பங்களிப்புகளில் தேர்தல் பத்திரங்களின் பங்கு வெகுவாக குறைந்துள்ளதாக 2023-2024 ஆம் ஆண்டிற்கான பாஜகவின் ஆண்டு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisment

Read In English: BJP donations surge 87% ahead of 2024 Lok Sabha polls, electoral bond share drops below 50%

இது தொடர்பான நேற்று (ஜன 27) தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில்,, ஆளும் கட்சிக்கு தன்னார்வ பங்களிப்புகள் 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. இதில், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,685.62 கோடியைப் பெற்றது, இது அதன் மொத்த வருமானத்தில் 43% ஆகும். 2022-2023 ஆம் ஆண்டில், கட்சி தேர்தல் பத்திரங்கள் வடிவில் ரூ.1,294.14 கோடியைப் பெற்றது, இது மொத்த வருமானத்தில் 61% ஆகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் செய்யத நிலையில், தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் ஆண்டிற்கு எதிர்பார்த்தபடி, தேர்தல்/பொது பிரச்சாரத்திற்கான பாஜகவின் செலவு முந்தைய ஆண்டில் ரூ.1,092.15 கோடியிலிருந்து ரூ.1,754.06 கோடியாக அதிகரித்ததாக அறிக்கை காட்டுகிறது. அதில், ரூ.591.39 கோடி விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரத்திற்காக செலவிடப்பட்டது.

Advertisment
Advertisement

நன்கொடைகளின் அடிப்படையில் பாஜகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் இருந்தாலும், தேர்தல் ஆண்டில் பங்களிப்புகளில் அதிகரித்தது காங்கிரஸின் ஆண்டு அறிக்கை, கட்சியின் மானியங்கள்/நன்கொடைகள்/பங்களிப்புகள் 2022-2023-ம் ஆண்டில், ரூ.268.62 கோடியிலிருந்து 2023-2024 இல் ரூ.1,129.66 கோடியாக அதிகரித்துள்ளது, இது கிட்டத்தட்ட முந்தைய ஆண்டைவிடவும் 320% அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கட்சிக்கு கிடைத்த மொத்த நன்கொடைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 73% கிடைத்துள்ளது. இதன் மதிப்பு, ரூ.828.36 கோடியாகவும் இருந்தன. இது 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.171.02 கோடியாக இருந்தது. காங்கிரஸின் தேர்தல் செலவு ரூ.619.67 கோடியாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டு ரூ.192.55 கோடியாக இருந்தது.

மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், 2023-2024 ஆண்டு, அரசியல் கட்சிகள் பெயர் குறிப்பிடப்படாத நிதியைப் பெறக்கூடிய கடைசி நிதியாண்டாக அமைந்தது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக பாஜக இருந்தது, ஏப்ரல் 2019 முதல் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்படும் வரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் பாதியை பா.ஜ.க பெற்றது (ரூ.6,060 கோடி), அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.1,609.53 கோடி) மற்றும் காங்கிரஸ் (ரூ.1,421.87 கோடி) அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2023-2024 ஆம் ஆண்டிற்கான டி.எம்.சி.யின் வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, கட்சியின் வருமானம் முந்தைய ஆண்டு ரூ.333.46 கோடியிலிருந்து ரூ.646.39 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அதன் வருவாயில் சுமார் 95% என்று குறிப்பிட்டுள்ளது.

Pm Modi Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment