Electoral Bonds | Congress | தேர்தல் பத்திரங்களை அதிகம் வழங்கிய பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவுக்கு ரூ.509 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17, 2024) தெரிவித்துள்ளன.
2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பாஜக இந்த பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.6,986.5 கோடி நிதியைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (ரூ. 1,397 கோடி), காங்கிரஸ் (ரூ. 1,334 கோடி) மற்றும் பிஆர்எஸ் (ரூ. 1,322 கோடி) ஆகிய கட்சிகள் உள்ளன.
ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜேடி ரூ 944.5 கோடியுடன் நான்காவது பெரிய கட்சியா உள்ளது. அடுத்த இடத்தில், தி.மு.க ரூ 656.5 கோடியும், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கிட்டத்தட்ட ரூ 442.8 கோடியும் தேர்தல் பத்திரங்களாக பெற்றுள்ளன.
தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) 89.75 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களைப் பெற்றுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்களை வாங்குவதில் இரண்டாவது பெரிய நிறுவனமான மேகா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து 50 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 37 சதவீதம் திமுகவுக்கு சென்றது.
திமுகவின் மற்ற முக்கிய நன்கொடையாளர்களில் மேகா இன்ஜினியரிங் ரூ 105 கோடி, இந்தியா சிமெண்ட்ஸ் ரூ 14 கோடி மற்றும் சன் டிவி ரூ 100 கோடி ஆகியவை அடங்கும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,397 கோடியை டிஎம்சி பெற்றுள்ளது, இது பாஜகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பெறுநராகும்.
நன்கொடையாளர்களின் அடையாளத்தை வெளியிடும் சில அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று. பாஜக, காங்கிரஸ் டிஎம்சி மற்றும் ஆம் ஆத்மி போன்ற முக்கிய கட்சிகள் இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காத நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தாக்கல் செய்தவற்றை இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளது.
டிடிபி ரூ.181.35 கோடியும், சிவசேனா ரூ.60.4 கோடியும், ஆர்ஜேடி ரூ.56 கோடியும், சமாஜ்வாடி கட்சி ரூ.14.05 கோடியும், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.14.05 கோடியும், அகாலிதளம் ரூ.7.26 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும், தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பத்திரங்களை மீட்டுக்கொண்டன.
சிபிஐ(எம்) தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியைப் பெற மாட்டோம் என்று அறிவித்துள்ளது, அதே சமயம் ஏஐஎம்ஐஎம் மற்றும் பிஎஸ்பியால் செய்யப்பட்ட பதிவுகள் பூஜ்ய ரசீதுகளைக் காட்டியுள்ளன.
ஆங்கிலத்தில் வாசிக்க : BJP got Rs 6,986.5 crore through poll bonds; Future Gaming top donor for DMK
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“