நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ உதவியாளர்களை திரட்டி மீட்டிங் நடக்க உள்ளது. இதில் அவர்களுக்கு பல கண்டிப்பான அறிவுரைகள் வழக்கப்பட உள்ளது.
பாஜக எம்.பி. - எம்.எல்.ஏ உதவியாளர்கள் மீட்டிங் :
2019ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, பல்வேறு கட்சிகளின் களப்பணி தீவிரமடைந்துள்ளது. தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக, அனைத்துக் கட்சிகளும் தங்களின் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக அலுவலகத்தில் முக்கிய கூட்டம் கூட்டப்பட உள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கூடும் இந்த கூட்டத்தில், கட்சியின் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் உதவியாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள் அளிக்கப்படும்.
65 பக்கம் கொண்ட சட்ட திட்டம் :
சுமார் 65 பக்கம் கொண்ட சட்டத் திட்டங்கள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் உதவியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளவை :
- பத்திரிக்கையாளர்களை கட்சியின் அலுவலக்த்தில் உட்கார்ந்து கதை பேச அனுமதிக்காதீர்கள். அவர்கள் வேலை செய்ய கட்சியை பற்றிய செய்திகளை கொடுங்கள்.
- புதிதாய் நம் கட்சியின் சமூக வலைதளம் பக்கத்தை பின் தொடருபவர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுங்கள்.
- கட்சியின், கொள்கை மற்றும் சித்தாந்தம் பற்றி புரிந்துகொண்டு, அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுபவர்கள் குறித்த கணக்கீட்டை தயார் செய்யுங்கள்.
- ஊடகத்தில் இருப்பவர்களிடம் கனிவாக நடந்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நம் கட்சி மீது அவர்களிடம் நல்ல பெயர் உருவாக வேண்டும்.
- பத்திரிக்கையாளர்களுக்கு சாதகமாக நடந்துக்கொள்ளுங்கள்.
- உங்களின் உயர் அதிகாரி எதாவது ஒரு வேலை காரணத்தினால் பிஸியாக இருப்பார்கள். எனவே, அவர்கள் சார்பில் ஊடகத்தினரிடம் நீங்கள் நல்லுறவில் இருப்பது அவசியம்.
- பொதுமக்களிடையே கட்சியை பற்ரி செய்திகளை கொண்டு செல்வது ஊடகம் தான். எனவே ஊடகத்தினருடன் உங்களுக்கு ஏதேனும் பிளவு அல்லது மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் அலுவலகத்திற்கு செய்திக்காக வந்தால், அவர்களுக்கு நல்வரவு அளித்து மகிழ்ச்சியாக பேசுங்கள். வெகு நேரம் பத்திரிக்கையாளர்களை காக்க வைக்காதீர்கள்.
- கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமான அல்லது அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை ஊடகத்துடன் பகிர்ந்துகொள்வது அனுமதிக்கப்படாது.
- கட்சி மற்றும் உங்கள் உயர் அதிகாரி சமூக வலைதளத்தில் நீங்கள் எந்த கருத்தும் பதிவிடக் கூடாது. உங்கள் கருத்துக்களோ அல்லது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட விவரத்தையோ பகிரக் கூடாது.
- தேவையற்ற நபர்களை சமூக வலைதளம் கருத்துக்களில் டேக் செய்வது கட்டாயம் தவிர்க்கவும்.
- பாஜகவின் கொள்கை சிந்தாந்தம் புரிந்து அதற்கு ஏற்றார்போல கருத்துக்களை பதிவிடும் நபர்களின் விவரங்களை சேகரித்து வைத்துகொள்ளவும். குறிப்பாக அவர்களின் செல்போன் நம்பர், வீட்டின் விலாசம், இ.மெயில் முகவரி, சமூக வலைத்தளம் கணக்குகள் மற்றும் அவர்களின் இணையதளம் என அனைத்து தகவல்களையும் பெற்று வைத்துகொள்ளுங்கள்.
- குறிப்பாக பாஜக என்பது மற்ற கட்சியை போல ஒரு சாதாரண கட்சியல்ல, நமக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது. முக்கியமாக நாம் நடத்தும் நிகழ்வுகள் மற்றும் செய்யும் பணிகள் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டதாகும். உங்களின் களப்பணி நம் கட்சியை மற்ற கட்சிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
இவ்வாறு, பல சட்ட திட்டங்கள் உயர் அதிகாரிகளின் உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாதவர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இதை கிளிக் செய்யவும்: