காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் இடைத் தேர்தல் பிரசாரத்தில், பழைய ஞாபகத்தில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச அரசியலில் முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இந்த அண்டு மார்ச் மாதம் காங்கிரஸில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து, 22 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சரவையில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
सिंधिया जी,
मध्यप्रदेश की जनता विश्वास दिलाती है कि तीन तारीख़ को हाथ के पंजे वाला बटन ही दबेगा। pic.twitter.com/dGJWGxdXad— MP Congress (@INCMP) October 31, 2020
தற்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் செய்தார். அப்போது, பாஜக வேட்பாளர் இமார்டி தேவியை ஆதரித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, உங்கள் கைமுட்டிகளை மூடிக்கொண்டு நவம்பர் 3ம் தேதி, ‘கை’ சின்னத்தில் பட்டனை அழுத்தி, காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று பழைய ஞாபகத்தில் கூறினார். உடனடியாக தவறுதலாக சொல்லிவிட்டோம் என்று உணர்ந்துகொண்ட சிந்தியா திருத்திக்கொண்டு தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துங்கள் என்று கூறினார்.
பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பழைய ஞாபகத்தில், கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிய வீடியோவைக் குறிப்பிட்டு, மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி, “சிந்தியா மத்திய பிரதேச மக்கள் நவம்பர் 3ம் தேதி கை சின்னத்திற்கு ஓட்டு போடுவார்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார்கள்.” என்று டுவீட் செய்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இமார்டி தேவி தேர்தல் சின்னத்தை மாற்றி கூறியதற்காக நவம்பர் 1ம் தேதி ஒரு நாள் மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது.
“இந்திய அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் மற்றும் இது சார்பாக செயல்படும் மற்ற அனைத்து அதிகாரங்களும், இமார்டி தேவிக்கு தடை விதிக்கின்றன. நவம்பர் 1ம் தேதி ஒரு நாள் நடைபெறும் தேர்தல்தொடர்பாக, மத்திய பிரதேசத்தில் எங்கும், எந்தவொரு பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பொது உரைகள் நிகழ்த்த தடை விதிக்கப்படுகிறது.” என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் இமார்டி தேவி பெயர் குறிப்பிடாத ஒரு அரசியல் போட்டியாளரை “பைத்தியம்” என்று கூறியதற்காகவும் அவரது குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் செவ்வாய்க்கிழமை இமார்டி தேவிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், பாஜக வேட்பாளர் இமார்டி தேவி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தேர்தல் ஆணையத்திடம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இமார்டி தேவி மறுப்பு தெரிவித்தார்.
பாஜக தலைவவர் ஜோதிராதித்யா சிந்தியா பழனைய நினைப்பில், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட விடீயோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.